herzindagi
How to do halasana yoga

Halasana Benefits : வயது முதிர்வை தடுக்க உதவும் ஹலாசனம்

இளம் வயதிலேயே வயதான தோற்றத்துடன் காணப்படுகிறீர்களா ? இன்றே ஹலாசனம் பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Editorial
Updated:- 2024-02-25, 09:24 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் ஹலாசனம்.  இதற்கு ஏர் கலப்பை என்று அர்த்தம். வயலில் நாத்து நடும் முன் மண்ணை கிளறி விட மாடுகளின் மீது ஏர் கலப்பை மாட்டி விட்டு ஓட்டிச் செல்வார்கள். ஏறக்குறைய அது போல தான் இந்த ஆசனம் இருக்கும். ஆங்கிலத்தில் இது Plough Pose என்று அழைக்கப்படுகிறது.

Halasana yoga pose

இதற்கு இரண்டு பயிற்சிகள உள்ளன. அதன் பிறகு ஹலாசனத்தை தொடங்கலாம்.

  • சிறு குழந்தைகள் கால்களைப் பிடித்துகொண்டே தரையில் ஊஞ்சல் ஆடுவது போல இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.
  • ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். இதன் பிறகு இரண்டாவது பயிற்சிக்கு செல்லலாம்.
  • தரையில் படுத்து கால்களை பாதியாக மடித்து கைகளைக் குதிகால்களின் அருகே வைக்கவும். இப்போது இடுப்பு பகுதியை மேலே உயர்த்தவும்.
  • இடுப்பை நன்கு மேலே தூக்கி கீழே இறக்கவும். இதே போல ஐந்து முறை செய்யவும்.
  • மூச்சை உள்ளே இழுத்து இடுப்பு பகுதியை மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விடும் போது இடுப்பு பகுதியைக் கீழே இறக்கவும்.
  • நீங்கள் இடுப்பு பகுதியைத் தூக்கும் போது மார்பு பகுதி தாடையின் கிட்டே வரும். கால்களை நேராக நீட்டித் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • இவையெல்லாம் ஹலாசனம் செய்வதற்கான பயிற்சி ஆசனங்கள். இப்போது ஹலாசனத்திற்கு செல்லலாம்.
  • தரையில் நேராக படுத்து கால்களை நீட்டி வைக்கவும். அடுத்ததாக கால்களை மடக்கி 90 டிகிரிக்கு தூக்கவும். கைகளை வைத்து இடுப்பு பகுதியை தூக்கி கால்களை அப்படியே தலைக்கு மேல் கொண்டு செல்லவும்.
  • பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
  • இதே போல ஐந்து முறை செய்யவும். இந்த ஆசனம் செய்த பிறகு உடலை தளர்த்திக்கொள்ள மாற்று ஆசனம் செய்யவும்.
  • தரையில் படுத்தபடி பத்மாசனம் போட்டு இரண்டு கைகளையும் திருப்பி தோள் பட்டையின் அருகில் வைத்து அழுத்தி உச்சம் தலையைத் தூக்கி தரையில் வைக்கவும். இதற்கு பெயர் மத்ஸ்யாசனம்.
  • அப்படியே கைகளை முன்னே கொண்டு வந்து கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும்.
  • இதை செய்யும் போது மார்பு பகுதி விரிந்திருக்க வேண்டும். பொறுமையாகக் கைகளை பின்னே கொண்டு எழுந்திருக்கவும்.
  • எப்போதுமே ஆசனத்தை முடித்த பிறகு ஒரு புறமாகத் திரும்பி எழுந்திருக்கவும்.

மேலும் படிங்க உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் அர்த்த மச்சேந்திராசனம்

ஹலாசனம் பயன்கள்

ஹலாசனம் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். இது தசை பதற்றத்தை எளிதாக்கும் மற்றும் உங்கள் முதுகெலும்பை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

மேலும் படிங்க மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் அனந்தாசனம்!

இது போன்ற யோகா கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com