மார்பகங்கள் பெரிதாக இருப்பதால் அசெளகரியமா ? 7 நாட்களில் குறைத்திடலாம்

மார்பகங்கள் பெரிதாக இருப்பதால் அசெளகரியமாக உணர்கிறீர்களா ? 7 நாட்களுக்கு சில விஷயங்களை கறாராக பின்பற்றினால் மார்பகங்களின் அளவை குறைக்கலாம். மார்பகங்களின் அளவை குறைப்பதற்கான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி இங்கு பகிரப்பட்டுள்ளது.
image

ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடுவதற்கு மரபியல், ஹார்மோன், உடல்எடை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவை பிரதான காரணங்களாகும். பெரிய அளவு மார்பகங்கள் பெண்களுக்கு சில நேரங்களில் அசெளகரியத்தை ஏற்படுத்தும். முதுகு வலிக்கும் வாய்ப்புண்டு. மேலும் பிறரை விட நமக்கு பெரியளவு மார்பகங்கள் உள்ளதே என்ற சிந்தனை உண்டாகும். இதனால் மார்பகங்களின் அளவை குறைத்திட பெண்கள் விரும்புகின்றனர். மார்பகங்களின் அளவை குறைக்க சில வழிகள் உள்ளன. சிலர் மருத்துவ சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவை குறைக்கின்றனர். இந்த பதிவில் பெரிதான மார்பகங்களுக்கு காரணம் என்ன ? மார்பகங்களின் அளவை குறைக்க வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி என்ன ? உணவு முறை மாற்றம் குறித்து பார்க்கலாம்.

reduce breast size

மார்பகம் பெரிதாவதற்கு காரணம் என்ன ?

மார்பகம் பெரிதாவதன் காரணத்தை ஜிகாண்டோமாஸ்டியா (Gigantomastia) எனக் குறிப்பிடுகின்றனர்.

ஹார்மோன் மாற்றங்கள்

ஒரு பெண் வயதிற்கு வந்தால் அல்லது கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களின் ஏற்படும் மாற்றங்கள் மார்பகங்களை பெரிதாக்குகின்றன.

மருந்துகள்

சில மருந்துகள் மார்பகங்களின் உள்ள திசுக்களை தூண்டிவிடும். இதனால் மார்பகங்களின் அளவு பெரிதாகும்.

உடல் பருமன்

உயரம், வயதிற்கு ஏற்ப எடையை பராமரிக்க தவறி உடல் பருமனாக இருந்தால் மார்பகங்கள் பெரிதாகும். உடலில் கொழுப்பு தேக்கமும் இதற்கு ஒரு காரணம்.

மரபியல்

சில பெண்களுக்கு டீனேஜ் பருவத்திலேயே மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இது மரபியல் ரீதியான விஷயம்.

மார்பகங்களை குறைக்க என்ன செய்யலாம் ?

மருந்துகள்

மார்பகங்களில் திசுக்கள் வளர்ச்சியை தடுக்கும் பல மாத்திரைகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் பரிந்துரைபடி உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உட்கொள்ளலாம்.

மசாஜ்

மார்பகங்களை மசாஜ் செய்தால் அவற்றின் அளவு குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு கரைப்பு

மார்பகங்கள் பெரிதாகிட கொழுப்பு தேக்கமும் முக்கிய காரணம். ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையை பெற்று உணவுமுறையில் மாற்றம் செய்தால் கொழுப்பு கரைந்து மார்பகங்களின் அளவு குறையும்.

7 நாட்களில் மார்பகங்களின் அளவை குறைப்பது எப்படி ?

உணவுமுறை

மார்பகங்களில் அதிகளவில் கொழுப்பு இருந்தால் உடல் எடையைக் குறைக்கும் போது மார்பகங்களின் அளவும் குறையும். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் கலோரிகள் எரிக்கப்பட்டு மார்பகங்களின் அளவு குறையும்.

வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மார்பகங்களின் அளவை குறைக்க உதவும். தினமும் தேவையான அளவு கலோரி கொண்ட உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் மார்பகங்களின் அளவை குறைக்கலாம்.

உடற்பயிற்சி

உடலில் உள்ள கொழுப்பை கரைத்தால் மார்பகங்களின் அளவு தானாக குறையும்.

ஈஸ்ட்ரோஜன் அளவு

ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மார்பகங்களின் வடிவத்தை தீர்மானிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் அளவுகளை கட்டுப்படுத்தினால் மார்பகங்கள் சிறிதாகும்.

உள்ளாடை

உடற்பயிற்சி செய்யாமல் மார்பகங்களை சிறிதாக தெரிய வைப்பதற்கு ஒரே வழி உள்ளது. அது சரியான உள்ளாடையை அணிவதாகும்.

மேலும் படிங்கஆர்வமுடன் உடற்பயிற்சி செய்வதற்கு உங்களை எப்படி ஊக்கப்படுத்தி கொள்ளலாம் தெரியுமா ?

மார்பகங்களின் அளவை குறைக்கும் உடற்பயிற்சிகள்

பெஞ்சில் அமர்ந்து செஸ்ட் பிரஸ் பயிற்சி செய்யவும். 3 செட் என்ற கணக்கில் ஒவ்வொரு செட்டிற்கும் 10-12 முறை செஸ்ட் பிரஸ் போடவும்.

reduce breast size in 7 days

அடுத்ததாக 3 செட் தண்டால் பயிற்சி எடுக்கவும். செஸ்ட் ஃபிளை பயிற்சி மார்பகங்களின் தோற்றத்தை மாற்றிடும். இதே போல வழக்கமான ஓட்டபயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிளிங் சென்றால் மார்பகம் நிச்சயம் குறையும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் கார்டியோ பயிற்சியை தவறாமல் செய்யவும்.

மார்பகங்களின் அளவை குறைத்திடும் உணவுமுறை

குறைந்த கலோரிகள் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும். தேவையான அளவு புரதம் மட்டும் உட்கொள்ளுங்கள். அதிகளவு புரதம் உடலில் கொழுப்பாக தேங்கிவிடும்.

ஜங்க் ஃபுட்ஸிற்கு முற்றிலும் விடைகொடுங்கள். அதிகளவு தண்ணீர் குடிக்கவும்.

Image credits : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP