ஆர்வமுடன் உடற்பயிற்சி செய்வதற்கு உங்களை எப்படி ஊக்கப்படுத்தி கொள்ளலாம் தெரியுமா ?

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க நினைப்பது சிரமமான காரியமாகும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றாலும் ஊக்கமும் மனவலிமையும் தேவை. இந்த பதிவில் உடற்பயிற்சி செய்வதற்கு எப்படி உங்களை ஊக்கப்படுத்தி கொள்ளலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
image

நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வது உங்களை சுறுசுறுப்பாகவும் எல்லா விஷயங்களிலும் ஈடுபாடுடன் வைத்திருக்கும். பலருக்கும் உடற்பயிற்சி செய்யும் எண்ணம் இருக்கும்; ஆனால் ஊக்கம் இருக்காது. இந்த கட்டுரையில் உடற்பயிற்சி செய்வதற்கு உங்களை ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி என பகிரப்பட்டுள்ளது. எனது உடல் எடை கட்டுக்குள் தானே இருக்கிறது; குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக தானே இருக்கிறேன் என்று நினைத்து உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டாம். இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நபரும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது.

உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கீடு

எந்த வேலை இருந்தாலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயிற்சி செய்வதற்கு அட்டவணையை உருவாக்கி அதன்படி செயல்படுங்கள். அலுவலக பணி, சமூக ஈடுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கவும்.

உடற்பயிற்சி செய்வதில் வித்தியாசம்

புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது போல தான் உடற்பயிற்சி செய்வதும். ஒரே விதமான உடற்பயிற்சியை செல்ல வேண்டும் என அவசியமில்லை. ஜிம்மிற்கு செல்ல அறிவுறுத்துவதாக நினைக்க வேண்டாம். உதாரணத்திற்கு ஒரு நாள் யோகா, ஓட்டப்பயிற்சி, ஜிம், வலுதூக்குதல், ஏரோபிக்ஸ் என மாற்றம் காணுங்கள். எத்தனை நாட்களுக்கு நீங்கள் இதை கடைபிடிக்கிறீர்களோ அதுவரை சலிப்பு ஏற்படாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

How do I motivate to exercise

மேலும் படிங்கமனதை அமைதிப்படுத்தி நிதானமாக முடிவெடுக்க சவாசனம் பயிற்சி செய்யுங்க!

உடற்பயிற்சிக்கு ஊக்குவிக்கும் பாடல்கள்

உடற்பயிற்சி செய்ய நினைக்கும் முதல் வாரத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு உடற்பயிற்சி செய்வதில் உற்சாகம் குறைய வாய்ப்புண்டு. எனவே உங்களுக்கு பிடித்தமான பாடல்களை அல்லது உடற்பயிற்சி செய்திட ஊக்குவிக்கும் பாடல்களை கொண்டு பிளே லிஸ்ட் உருவாக்கிடுங்கள்.

உடற்பயிற்சி நண்பரை தேடுங்கள்

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமானால் கண்டிப்பான நண்பரை தேடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்ய யோசித்தாலும் அவர் கண்டிப்பாக அழைத்து சென்றுவிடுறார். இது உங்களுக்கு ஒரு விதமான ஊக்கத்தை அளிக்கும்.

சோம்பேறித்தனம் கூடாது

தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை நினைவில் கொள்ளுங்கள். வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வதுவிட்டேன்; இன்று ஒரு நாள் செய்யவில்லை என்றால் பாதிப்பு இல்லை என மெத்தனம் வேண்டாம். உடல்நல பாதிப்பு, காயம் அல்லது தவிர்க்கவே முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் உடற்பயிறி செய்வதை தவிர்க்கலாம்.

உடற்தகுதி டிராக்கர்

ஏராளமான உடற்தகுதி டிராக்கர்கள் கிடைக்கின்றன. அதில் சிறந்த ஒன்றை வாங்கி உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் அணிந்திடுங்கள். தினமும் எவ்வளவு அடிகள் நடந்து இருக்கிறீர்கள்; எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டது, உடல் ஆரோக்கியத்தின் நிலையை தெரிந்து கொள்ள முடியும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP