reduce thigh fat : தொங்கும் தொடை கொழுப்பைக் குறைக்க சிறந்த உடற்பயிற்சிகள்

தொடை சதை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும். உபகரணங்கள் இல்லாமல் ஒரே மாதத்தில் தொடையில் உள்ள கொழுப்பை குறைத்திட பின்வரும் எளிய பயிற்சிகளை தினமும் செய்யலாம்…

Shobana Vigneshwar
best thigh fat reduction exercises

உடல் பாகங்களை ஃபிட் ஆக வைத்துக்கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். உடல் எடை கூடும் பொழுது இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்குகிறது. இந்நிலையில் தொடை பகுதியை இலக்காக கொண்டு செய்யப்படும் பயிற்சிகளை செய்து தளர்ந்த தொடையை இறுக்கமாக்கலாம். தொடையின் தசைகளை வலுப்படுத்தவும், அவற்றை மெலிதாக மாற்றவும் செய்யப்படும் பயிற்சிகள் குறித்து யோகா நிபுணர் ரீட்டா கனபர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இது பற்றிய தகவல்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிறந்த முடிவுகளுக்கு, பின்வரும் பயிற்சிகளை வாரத்திற்கு 4 முறையாவது செய்ய வேண்டும். இதற்கான 3 பயிற்சிகளைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

முதல் உடற்பயிற்சி

thigh fat reduction exercises

  • இதை செய்ய முதலில் நேராக நிற்கவும்.
  • தோள்பட்டை அகலத்தை விட சற்று தூரமாக உங்கள் கால்களை விலக்கி வைக்கவும்.
  • பின்னர் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி இணைக்கவும்.
  • இதற்குப் பிறகு உங்கள் கைகளை கீழே கொண்டு வந்து கால்களுக்கு இடையில் குறுக்காக வைக்கவும்.
  • இதை முறையில் மேலும் கீழும் மாற்றி மாற்றி தொடர்ந்து பல முறை செய்யவும்.

இரண்டாவது உடற்பயிற்சி

thigh fat reduction

  • இதை செய்ய கால்களை இன்னும் கொஞ்சம் அகலமாக விலகி இருக்க வேண்டும்.
  • பின்னர் முழங்கால்களை சற்று வளைத்து உடலை கீழே இறக்கி நிற்கவும்.
  • உங்கள் கைகளை தலைக்கு பின்னால் இணைத்து வைக்கவும்.
  • அதற்குப் பிறகு குனிந்து இடது கையின் முழங்கையை வைத்து இடது காலின் முழங்காலை தொட முயற்சிக்கவும்.
  • இதை முறையில் வலது பக்கமும் செய்ய வேண்டும்.
  • இந்த பயிற்சியை இருபுறமும் பல முறை தொடர்ந்து செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்: இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

மூன்றாவது உடற்பயிற்சி

thigh fat reduction tips

  • இதை செய்ய, கால்களை விலக்கி வைத்து சமநிலையில் நிற்கவும்.
  • பின்னர் உங்கள் முழங்கால்களை சற்று வளைத்து கீழே குனிந்து, கைகளை முன் நோக்கி நீட்டவும்.
  • அதன் பிறகு நேராக நிற்கவும்.
  • பின்னர் உங்கள் முழங்கால்களை சற்று வளைத்து கீழே குனிந்து, கைகளை உடலின் இருபுறமும் பக்கவாட்டில் நீட்டவும்.
  • இந்த பயிற்சியை பல முறை செய்யவும்.

இந்த மூன்று பயிற்சிகளும் மிகவும் எளிதானவை, மேலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் தொடைகளின் தசைகளை விரைவில் குறைத்திடலாம். எந்த உபகரணமும் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer