இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வீட்டிலேயே இந்த 4 உடற்பயிற்சிகள் செய்யலாம்

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆசையா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த கார்டியோ பயிற்சிகளை இன்றே தொடங்குங்கள். இது நல்ல பலனை தருகிறது

Exercise for heart blockage

மாரடைப்பு மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இருதய செயலிழப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம் என்னவென்றால் 80 சதவீத மக்கள் 11-25 வயதுடைய இளம் வயதினர் என்பதாகும். இதை சரிசெய்ய பெரிய அளவில் நிலைமையை மேம்படுத்த முடியவில்லை என்றாலும். நம் வாழ்க்கை முறையில் சரியான உணவு மற்றும் இருதய பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம். கார்டியோ உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவும். இந்த தகவலை உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணரும், பாடி ஃபிட் டிவி & தி டயட் சேனலின் நிறுவனருமான ரியா எக்லாஸ் ஷ்ராஃப் கூறியுள்ளார். வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய சில கார்டியோ உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

ஜம்பிங் ஜாக்ஸ்

jimm inside

ஜம்பின் ஜாக்ஸ் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி, இது பல தசை குழுக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இதயத் துடிப்பை மேம்படுத்த உதவுகிறது. இதை செய்ய உங்கள் கை, கால்களை நேராக வைத்திருக்க வேண்டும், அதன்பிறகு நிங்கள் குதிக்கும் முறையை இந்த பயிற்சியில் கையாள வேண்டு. நீங்கள் குதிக்கும் அதே வேலையில் உங்கள் கைகளையும் உயர்த்த வேண்டும். படிப்படியாக துள்ளிக்குதிப்பதை உயர்த்திக்கொள்ளலாம்.

பர்பீஸ்

வலிமை மற்றும் கார்டியோவை இணைக்க பர்பீஸ் ஒரு சிறந்த வழியாகும். இதை செய்வதற்கு கை, கால் முட்டிகள் தரையில் படாமல் குப்புற படுத்த படி இருக்க வேண்டும். உங்கள் உள்ளங்கை மற்றும் கால் விரல்கள் மட்டும் தரயில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். சில வினடிகள் இந்த நிலையில் நீங்கள் அப்படியே இருக்க வேண்டும். அதம் பிறகு பழைய நிலைக்கு வந்துவிடலாம். இதுபோன்று 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். நீங்கள் பழைய நிலைக்கு வந்தவுடன் கை,கால்களை அசைத்து சரிசெய்ய வேண்டும்.

மலை ஏறும் பயிற்சி

mountain climbers inside

இந்த பயிற்சிக்கு கைகளை நேராக வைத்து, உடலை தலை முதல் குதிகால் வரை நேர்கோட்டில் அமைக்கவும். உங்கள் மார்பை நோக்கி ஒரு முழங்காலை செலுத்தி, விரைவாக மற்றொரு கால்களை மாற்றவும், இயங்கும் இயக்கத்தில் முன்னும் பின்னுமாக மாறி மாறி செய்ய வேண்டும். செயல் முழுவதும் மைய ஈடுபாடு மற்றும் இடுப்பு மட்டத்தை வைத்திருக்க வேண்டும். 30-60 வினாடிகள் தொடர்ச்சியான செயல்பாடுகளை இலக்காக செய்ய வேண்டும்.

உயர் முழங்கால் பயிற்சி

மேலும் படிக்க: காலையில் யோகா செய்ய முடியாதவர்கள் மாலையில் யோகா செய்வது நல்லதா?

உயர் முழங்கால் பயிற்சி கோர் மற்றும் இருதய அமைப்பை வலுப்படுத்த வேலை செய்கின்றன. இதை செய்ய கால்களை சற்று தள்ளி வைத்து முழங்கால்களை உங்கள் மார்பை நோக்கி உயர்த்தவும். கலோரி எரிப்பை அதிகரிக்க கைகளை உங்கள் கால்களுடன் பிடித்தபடி செய்ய வேண்டும். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் செய்யலாம். உங்கள் உடற்தகுதி மேம்படும் போது படிப்படியாக காலத்தை அதிகரிக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP