herzindagi
walking after dinner benefits

walking after dinner: இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-21, 09:13 IST

பரபரப்பான வாழ்க்கை சூழலில், ஒரு சிலரால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். உடல் செயல்பாடுகளற்ற வாழ்க்கை முறை நம்மை சோம்பேறிகளாக மாற்றுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் தீங்கும் விளைவிக்கின்றன. நோயின்றி வாழ உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டியது அவசியம்.

ஜிம்மிற்கு செல்வதற்கோ அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கோ உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போனாலும், இரவு உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடை பயிற்சி செய்ய முயற்சி செய்யலாம். இரவு உணவு மற்றும் தூங்கும் நேரத்திற்கு இடையேயான அந்த நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கிறது. இதைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

நடைப்பயிற்சி செய்வது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி செய்வது, உடல் அதிக இரைப்பை நொதிகளை உற்பத்தி செய்யவும், வயிற்றில் உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைக்கவும் அனுமதிக்கிறது. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். இதன் மூலம் உப்புசம், மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

walking after dinner

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் உணவுக்கு பிறகு உடனே படுக்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக நடை பயிற்சி செய்யலாம். இது கலோரிகளை எரிக்கவும், உங்கள் உடல் எடையை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உங்கள் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்புகளை சுலபமாக குறைக்கலாம். இது உங்கள் எடை இழப்புக்கும் உதவியாக இருக்கும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி செய்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உங்கள் உள் உறுப்புகளை சிறப்பாக செயல்பட அனுமதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் காய்ச்சல், சளி உட்பட பல கடுமையான நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

உணவு சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்நிலையில் உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உங்கள் உடலில் உள்ள குளுக்கோஸ் ஓரளவு பயன்படுத்தப்படும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

பசி ஆர்வத்தை குறைக்கும்

walking after dinner

ஒரு சிலருக்கு முழுமையான இரவு உணவு சாப்பிட்ட பிறகும், நடு இரவில் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் உள்ளவர்கள் இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செய்யலாம். இதன்மூலம் நள்ளிரவில் தேவையில்லாத ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது உங்களுக்கு திருப்தியான உணர்வை கொடுக்கும், இதன் மூலம் நடு இரவில் ஏற்படும் பசி ஆர்வத்தை குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

நல்ல தூக்கம் வரும்

உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி உங்கள் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. இரவு தூங்குவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உணவிற்குப் பிறகு வாக்கிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளலாம். இதற்கான விளைவுகளை நீங்கள் விரைவில் பார்க்க முடியும்.

நடைப்பயிற்சி உங்கள் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு உணவிற்கு பிறகு நடை பயிற்சி செய்யுங்கள்.

மன சோர்வை போக்கும்

walking after dinner

நடைப்பயிற்சி செய்யும் பொழுது எண்டோர்பின் எனும் ஹார்மோனை உடல் வெளியிடுகிறது. இது மனச்சோர்வை குறைத்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com