
குளிர்காலத்தின் போது நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சனையாக முடி உதிர்வு இருக்கிறது. . பொதுவாகவே, பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இந்த வறண்ட காற்று மற்றும் வீட்டிற்குள் நாம் பயன்படுத்தும் ஹீட்டர்கள் இரண்டும் சேர்ந்து, நமது தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை உறிந்து விடுகின்றன.
இதனால் உச்சந்தலை வறண்டு போவதுடன், முடி மிகவும் வலுவிழந்து உதிரக்கூடியதாக மாறுகிறது. இதன் விளைவாகவே, தலை சீவும் போதெல்லாம் முடி கொத்து கொத்தாக உதிர்வதையும், முடி வறட்சியாக மாறுவதையும் நாம் பார்க்க முடிகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. சரியான பராமரிப்பு மற்றும் உணவு முறைகள் மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
முடி உதிர்வதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை என இரண்டு காரணங்களும் உள்ளன. குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்பதால் நாம் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவோம். இதனால் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் வைட்டமின் குறைபாடுகள் முடி உதிர்வை அதிகரிக்கும். மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் முடி உதிர்வு அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் சில வழிமுறைகளை பின்பற்றலாம். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
வறண்ட உச்சந்தலைக்கு புத்துயிர் கொடுக்க எண்ணெய் மசாஜ் மிக அவசியம். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி, வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். இது கூந்தல் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
-1764841749349.jpg)
மேலும் படிக்க: Oily Skin Face Pack: குளிர்காலத்தில் அதிக எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்
கடுமையான இரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சல்பேட் இல்லாத மிதமான ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பாதுகாக்கப்படும்.
குளிர்காலத்தில் ஷாம்பூ போட்ட பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் அவசியம். இது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, முடி வறட்சியாவதை தடுக்கிறது. இதன் மூலம் முடி உதிர்வும் குறைகிறது.
குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது இதமாக இருக்கலாம். ஆனால், அதிக சூடுள்ள நீர் தலையில் படும் போது, அது முடியின் வேர்களை பலவீனப்படுத்தும். எனவே, தலைக்குக் குளிக்க எப்போதும் வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்.

முடி ஆரோக்கியமாக வளர புரதம் அவசியம். முட்டை, கீரை வகைகள், விதை வகைகள் மற்றும் மீன் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது முடி வேர்களை உறுதியாக்கும். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவும்.
சிறிது நேரம் விரல்களால் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்வது நல்லது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வேர்கால்களை தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், இது உங்களுக்கு ரிலாக்ஸான உணர்வையும் அளிக்கும்.
ஏற்கனவே வறண்டு இருக்கும் முடியில் ஹேர் டிரையர் (Hair Dryer) மற்றும் ஸ்ட்ரைட்னிங் மெஷின் போன்ற வெப்பமான கருவிகளை பயன்படுத்தும் போது, முடி உதிர்வது அதிகரிக்கும். எனவே, இது போன்ற கருவிகள் பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: Winter Hair Care Routine: குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைக்க இந்த 5 டிப்ஸை அவசியம் பின்பற்றவும்
உணவு முறையில் மாற்றம்:
வெளிப்புற பராமரிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியம். அதற்காக உங்கள் உணவு முறையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
குளிர்காலம் முடியும் வரை இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். ஆனால், அதிகப்படியான முடி உதிர்வு இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com