உடல்நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போகும் ஆசனம் அஸ்வ சஞ்சலனாசனா. இது ஆங்கிலத்தில் equestrian pose என்று சொல்லப்படுகிறது. சூரிய நமஸ்காரத்தில் அஸ்வ சஞ்சலனாசனா நான்காவது படியாகும். அஸ்வ சஞ்சலனாசனத்தை பயிற்சி ஆசனங்களில் இருந்து தொடங்குவது நல்லது.
முதலில் வஜ்ராசனம் நிலையில் உட்கார்ந்து அதன் பிறகு வலது காலை மட்டுமே முன்னே எடுத்து வைக்கவும். இரண்டு கைகளையும் வலது மூட்டில் வைத்து அழுத்தம் கொடுத்து உட்காரவும். இதை செய்யும் போது உங்கள் இடது காலில் நெகிழ்வு தன்மை ஏற்படும். மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்துவிடுங்கள். இதே போல இடது காலில் மட்டும் பத்து முறை செய்யவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
வலது காலில் செய்தது போல் அப்படியே இடது காலுக்கு மாற்றி செய்யவும். இரண்டு கைகளையும் இடது மூட்டில் வைத்து அழுத்தம் கொடுத்து உட்காரவும். இப்போது உங்கள் வலது காலில் நெகிழ்வு தன்மை ஏற்படும். வஜ்ராசனம் நிலைக்கு திரும்பி உடலை தளர்த்திவிட்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
முதல் பயிற்சியை கால்களுக்காகவும், இரண்டாவது பயிற்சியை முதுகிற்காக செய்யவும். அடுத்ததாக வஜ்ராசனம் நிலையில் இருந்து கைகளை முன்னே நீட்டி கவிழ்ந்து படுக்கவும். கைகளை மார்பு பகுதியின் அருகின் வைத்து தண்டாள் எடுப்பது போல் மார்பு பகுதியை உயர்த்தி தோள்பட்டையை நன்றாக விரித்து தலையை பின்னே சாய்க்கவும். இது புஜங்காசனம் ஆகும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும். தரையில் நேராகப் படுத்து உடலை தளர்த்தி கொள்ளலாம். அப்படியே பொறுமையாக எழுந்திருக்கவும்.
மேலும் படிங்க உச்சி முதல் பாதம் வரை… ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு பலனளிக்கும் வீரபத்ராசனம்
மேலும் படிங்க தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு செய்ய வேண்டிய யோகாசனங்கள்
இந்த ஆசனம் கால்கள், கணுக்கால், பாதங்கள், முழங்கால்கள் மற்றும் இடுப்புகளில் உடல் வலிமையை அதிகரிக்கிறது. அதே போல நுரையீரல் திறனையும் மேம்படுத்துகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com