Ardha Uttanasana Benefits : நல்ல உடல் தோரணைக்கு உதவும் அர்த்த உத்தனாசனம்

மோசமான உடல் தோரணையினால் கேலி கிண்டலுக்கு ஆளாகுகிறீர்களா ? தினமும் அர்த்த உத்தனாசனம் செய்ய ஆரம்பியுங்கள்.

ardha uttanasana steps

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போகும் ஆசனம் அர்த்த உத்தனாசனம். அர்த்த என்றால் பாதி, உத்தானாசம் என்பது கைகளை பாதத்தின் அருகே வைப்பது. இது ஆங்கிலத்தில் half standing forward pose என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்திற்கு ஒரு தளர்வு பயிற்சியும், இரண்டு பயிற்சி ஆசனங்களும் உள்ளன.

how to do standing forward bend

பயிற்சி 1

வஜ்ராசனம் நிலையில் உட்கார்ந்து கைகளை நேராக நீட்டி தரையில் வைத்து பிறகு குழந்தை தவழ்வது போல் உடல் அமைப்பை மாற்றுங்கள். அதிலிருந்து இடுப்பு பகுதியை மேலே உயர்த்தி குதிகால்களை தள்ளித் தள்ளி இடைவெளி ஏற்படுத்தி தரையில் அழுத்தவும். இது அதோ முக ஸ்வனாசனா.

பொறுமையாக இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.

பயிற்சி 2

அதோ முக ஸ்வானாசன நிலையிலேயே இரு கால்களுக்கும் இடையே இடைவெளி விட்டு ஜிம்மில் சைக்களின் செய்வது போல கால்களை மாற்றி மாற்றி மடக்கி கீழே வைத்து உயர்த்தவும். இதை செய்யும் போது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். அதனால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.

மேலும் படிங்கஇதய நோய்களில் இருந்து விடுபட ஹனுமனாசனம் செய்யுங்கள்!

அர்த்த உத்தனாசனம்

  • இந்த ஆசனம் நின்ற நிலை ஆசனமாகும். நேராக நின்று கால் பாதங்களை கொஞ்சம் அகற்றி வைக்கலாம். கைகளை மேலே உயர்த்தும் போது முகுது பகுதி நேராக இருக்க வேண்டும்.
  • தற்போது கீழ் முதுகை பாதியாக வளைத்து சில விநாடிகளுக்கு அப்படியே இருக்கவும்.
  • அதன் பிறகு கைகளை முழுவதுமாக கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும்.
  • தலையை சற்று உயர்த்தி பார்க்கலாம். கைகள் முழுவதுமாக கீழே வரவில்லை என்றால் விரல்களை மட்டும் தரையில் வைத்து தாங்கவும்
  • முதுகு பகுதியும், முழங்கால்களும் வளையக் கூடாது. நேராக இருப்பது அவசியம்.
  • மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது பாதியாக வளைக்கும் இடத்தில் சில விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தி விட்டு மேலே வரவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
  • கைகளை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ஆசனத்தை செய்யும் போது பொறுமையாக வெளியே விடவும்

தளர்வு ஆசனம்

நாம் அர்த்த உத்தனாசனத்தில் முதுகு பகுதியை நேராக வளைத்தோம். அதற்கு தளர்வு அளிக்க மார்பு பகுதியை நன்கு விரித்து முதுகை பின்நோக்கி வளைக்கவும்.

மேலும் படிங்கஉடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கும் சக்தியூட்டும் சக்கராசனம்

அர்த்த உத்தனாசனம் பயன்கள்

  • முதுகெலும்பு நமது உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும் ஏனெனில் இது நல்ல உடல் தோரணைக்கு அவசியம். இந்த யோகா ஆசனம் முதுகுத் தண்டை நீட்டி பலப்படுத்துகிறது.
  • கல்லீரல், கணையம், சிறுநீரகம், மண்ணீரல் போன்ற நமது அடிவயிற்றில் உள்ள அனைத்து உள் உறுப்புகளையும் தூண்டி விடுகிறது. அதனால் உறுப்புகளின் செயல்பாடு அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.
  • இந்த ஆசனம் மாதவிடாய் வலியை போக்க உதவுகிறது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP