Ardha sirsasana Benefits : நினைவாற்றலை அதிகரிக்க அர்த்த சிரசாசனம் செய்யுங்க

அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறீர்களா? கவலை வேண்டாம். தொடர்ந்து அர்த்த சிரசாசனம் செய்யுங்கள்.

half headstand pose on forearms yoga

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் அர்த்த சிரசாசனம். அர்த்த என்றால் பாதி என பொருள். சிரசாசனம் என்பது ஆசனங்களின் ராஜாவாகும். இந்த ஆசனம் ஆங்கிலத்தில் HALF HEADSTAND POSE என்று சொல்லப்படுகிறது. அர்த்த சிரசாசனம் செய்யும் முன்பாக சில தளர்வு பயிற்சிகளைச் செய்யலாம். கால்களை நன்றாக நீட்டி நேராக உட்காருவது தண்டாசனம் ஆகும். இந்த நிலையில் இருந்து நாம் வஜ்ராசனத்திற்கு செல்லலாம்.

பயிற்சி 1

கால்களை மடித்து குதிகால்களில் அமரவும். இதன் பிறகு இரு கைகளையும் தரையில் நேராக நீட்டி தவழும் குழந்தை போல் இருங்கள். கைகளுக்கு இடையே எந்த அளவிற்கு இடைவெளி இருக்கிறதோ அதே அளவிற்கு கால்களின் இடையே இடைவெளி இருக்க வேண்டும். அடுத்ததாக தாடையையும், மார்பு பகுதியையும் கீழே இறக்குங்கள்.

இப்போது கைகளை முழுவதுமாக நீட்டி முதுகு தண்டிற்கு அழுத்தம் கொடுத்து தாடையையும், மார்பு பகுதியையும் தரையில் ஒட்டி வைக்கவும். கால்கள் 90 டிகிரியில் இருக்க வேண்டும். மடக்க கூடாது. இந்த நிலையில் 10 விநாடிகளுக்கு இருங்கள். இதன் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி ஓய்வு எடுங்கள். இந்த நிலை உங்கள் முதுகு தண்டிற்கு தளர்வு அளிக்கும்.

பயிற்சி 2

வஜ்ராசனம் நிலையில் இருந்து கைகளை தரையில் நீட்டி, முட்டி போட்டு அப்படியே எந்திரித்து பர்வதாசனம் நிலைக்கு உடல் அமைப்பை மாற்றவும். அதாவது V எழுத்தை தலைகீழாக வைத்தது போல. பத்து விநாடிகளுக்கு இந்த ஆசனத்தைச் செய்துவிட்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். வஜ்ராசனம் நிலைக்குத் திரும்பி உடலை தளர்த்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்கசெரிமான அமைப்பை ஊக்குவிக்கும் ஜானு சிரசாசனம்

ardha sirsasana steps

தற்போது வஜ்ராசனம் நிலையில் இருந்து அர்த்த சிரசாசனம் செய்யலாம். இரண்டு முழங்கைகளையும் தரையில் ஒட்டி வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை கவனமாகச் செய்யுங்கள் இல்லையெனில் தலைவலி ஏற்படும். கைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து தரையில் ஒரு வளைவு போல் வைத்து விடுங்கள். அதில் நெற்றியை ஒட்டி வைத்து பின்புறத்தை தூக்கவும். பத்து விநாடிகளுக்குச் செய்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.

அர்த்த சிரசானத்தில் முதலில் நெற்றியை தரையோடு ஒட்டி வைப்போம். ஆனால் பின்புறத்தை தூக்கும் போது உச்சந்தலை அழுத்தப்பட்டு இருப்பது அவசியம். கைகள் வெறும் பாதுகாப்பு மட்டுமே. ஏறக்குறைய இந்த ஆசனம் பர்வதாசனம் போல தான்.

கைகளை நீட்டி பாலாசனம் நிலைக்கு சென்று உடலை தளர்த்துங்கள். பர்வதாசனம் சரியாக தெரிந்தால் மட்டுமே அர்த்த சிரசாசனம் செய்ய எளிதாக இருக்கும். அதனால் பர்வதாசனத்தை நன்கு பயிற்சி செய்யுங்கள். முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

மேலும் படிங்ககழுத்து வலியை போக்கிடும் சசங்காசனம்

பயன்கள்

இந்த ஆசனம் செய்வதால் மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்கள் ஆக்டிவாக மாறும். இதனால் உங்கள் ஞாபக சக்தி அதிகமாகும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP