உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் ஜானு சிரசாசனம். இது ஆங்கிலத்தில் head to knee pose என்று அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ஜானு என்றால் முட்டி, சிரசு என்றால் தலை. முட்டியில் தலையைக் கொண்டு வந்து வைப்பதால் இதற்கு ஜானு சிரசாசனம் என பெயர்.
இந்த ஆசனம் பச்சிமோத்தாசனம் போலவே இருக்கும். அதில் இரண்டு கால்களை நீட்டி வைத்திருப்போம். இந்த ஆசனம் ஒரு காலை மடக்கி வைத்து செய்யும் ஆசனமாகும். ஆசனம் முன்பாகக் கால்களை நீட்டி நன்கு ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள். இரண்டு கைகளையும் கொண்டு வலது காலின் பாதத்தைப் பிடித்து அதைத் தூக்கி ஸ்ரெட்ச் செய்யவும். பத்து விநாடிகளுக்கு இந்த நிலையில் இருந்து தலையை கால் முட்டியில் ஒட்டி வைக்கும்.
இதை செய்யும் போது உங்கள் கால் 80 டிகிரியில் இருக்கும். இது போல இடது காலிலும் ஸ்ரெட்ச் செய்யவும். முட்டி மடங்காமல் காலை முன்னே கொண்டு வைத்து தலையை கால் முட்டியில் வைக்கவும். மெதுவாகக் காலை கீழே கொண்டு வரவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
தற்போது ஜானு சிரசாசனத்தை தொடங்கலாம். இரண்டு கைகளையும் மேலே தூக்கி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து கைகளைக் பொறுமையாக கீழே கொண்டு வந்து இடது காலின் விரல்களைப் பிடிக்கவும். மார்பு பகுதியைச் சற்று உயர்த்தி கொண்டு தலையை தூக்கி முட்டி பகுதியில் வைக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிங்ககழுத்து வலியை போக்கிடும் சசங்காசனம்
கட்டை விரல் பின்னோக்கி இருக்க வேண்டும். நீங்கள் கட்டை விரலை முன்னோக்கி வைத்தால் கால் முட்டியில் இடைவெளி வரும். பொறுமையாகத் தலையை தூக்கி கைகளை மேலே உயர்த்தவும். இதே போல இடது காலை மடித்து வலது காலின் விரல்களைப் பிடித்து ஆசனத்தை செய்யவும், உள்ளங்கால் தொடையுடன் ஒட்டி இருக்க வேண்டும்.
ஆசனம் செய்யும் முன்பாகவும் பின்பாகவும் ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள். அப்போது தான் பலன் அதிகமாகக் கிடைக்கும். பயிற்சி செய்ய செய்ய அனைத்தும் சாத்தியமாகும். குறிப்பாக இந்த ஆசனத்தை செய்யும் போது முழங்கை, முழங்கால் பகுதிகளை மடக்க கூடாது.
ஜானு சிரசாசனம் பயன்கள்
- தொப்பை அதிகமாக இருக்கும் நபர்கள் இந்த ஆசனத்தை செய்யும் போது கொழுப்பு கரையும்.
- ஜீரணத்தை ஊக்குவிக்க இந்த ஆசனம் பலன் தரும்.
- வயிறு சமந்தமான பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த ஆசனத்தைச் செய்யலாம்.
- ஜானு சிராசனம் செய்வதால் கை, கால்கள் வலுபெறும்.
இது போன்ற யோகாசன பயிற்சிகளைத் தெரிந்து கொள்ள ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation