ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் சந்திக்கும் பெரும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது கழுத்துவலி. நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, கணினி மற்றும் மொபைல் போன்களை அதிகளவில் பயன்படுத்துவது, நுணுக்கமான வேலைகளைத் தொடர்ச்சியாக செய்வது போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் கழுத்துவலியை அனுபவிக்க நேரிடும். இதற்காகவே ப்ரத்யேகமாக உள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வலியைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த நேரத்தில் தான் சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை வீட்டில் இருந்தோ? அல்லது அதற்குரிய நிலையங்களுக்குச் சென்றோ முறையாக மேற்கொண்டு கழுத்து வலியைக் குணப்படுத்த முயற்சி செய்வார்கள். இந்த வரிசையில் இன்றைக்கு கழுத்து வலியைக் குணமாக்கக்கூடிய 5 யோகாசனங்கள் என்னென்ன? அவற்றை எப்படி மேற்கொள்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
கழுத்து வலிமைப் பெறுவதோடு உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சீராக செயல்படுவதற்கு உதவியாக உள்ள ஆசனங்களில் ஒன்றாக உள்ளது புஜங்காசனம். பாம்பு படமெடுப்பது போல் உடல் வளைந்து முகம் நேராக இருப்பது போன்று செய்யக்கூடிய இந்த ஆசனத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் செயல்படுகிறது. இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது மார்பகங்கள் விரிவடைந்து, பின்பக்கம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய வலியை நீக்க புஜங்காசனம் உதவியாக உள்ளது. நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றக்கூடிய நபர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ச்சியாக செய்யவும். இதனால் கழுத்து வலி பிரச்சனைகளுக்குக் குட் பை சொல்லலாம்.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் காலையில் ஓடுவதில் இவ்வளவு நன்மைகளா? குளிர்கால உடற்பயிற்சிக்கான குறிப்புகள்
கழுத்து வலிக்கு நிவாரணம் தரக்கூடிய ஆசனங்களில் ஒன்றாக உள்ளது சர்பாசனம். குப்புறப்படுத்துக் கொண்டு வயிறு தரையைத் தொடும்படியும், உள்ளங்கைகளை முதுகுப் பின்னால் சேர்த்து இணைத்துக் கொண்டு தலை, மார்பு மற்றும் தோள்பட்டை உயர்த்தி செய்யக்கூடிய ஆசனம் தான் சர்பாசனம். இந்த ஆசனத்தை செய்யும் போது கால்கள் தரையில் படும் படி இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. 8-10 நிமிடங்கள் மேற்கொண்டாலே போதும். உடல் முழுவதும் இருக்கும் வலியைப் போக்குவதோடு கழுத்து வலி பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது.
நாம் அனைவரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனம் தான் பாலாசனம். கட்டிலில் படுத்துக் கொண்டே இந்த ஆசனத்தை செய்ய முடியும். குழந்தைகள் குப்புறப்படுத்திருப்பது போன்று செய்யக்கூடிய ஆசனத்தில் கழுத்து, தோள்பட்டை, முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தம் ஏற்பட செய்யுமாறு அமையும். இந்த ஆசனத்தைத் தொடர்ச்சியாக செய்யும் போது நாள்பட்ட கழுத்து வலியைக் குணப்படுத்த முடியும்.
மேலும் படிக்க: உயிர் போகும் அளவிற்கு வலியை கொடுக்கும் "மார்பக வலியை" முற்றிலும் தடுக்க 13 சக்தியுள்ள தீர்வுகள்
உடலை கச்சிதமாகவும், கழுத்து வலி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆசனங்களில் ஒன்றாக உள்ளது மர்ஜாரியாசனா. cat cow pose என்றழைக்கப்படும் மர்ஜாரியாசனா முதுகு வளைந்து செய்யும் ஆசனமாகும். இவற்றைத் தொடர்ச்சியாக செய்யும் போது கழுத்து வலியை எளிதில் நீக்க முடியும்.
நம்மில் பலரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனங்களில் ஒன்றாக உள்ளது பச்சிமோத்தானாசனம். தரையில் அமர்ந்தபடி கால்களை நீட்டி செய்யக்கூடிய இந்த ஆசனத்தின் போது நரம்பு மண்டலத்தை சீராக செயல்படுத்துவதோடு கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியை நீக்க உதவியாக இருக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com