மஞ்சிமா மோகன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இவருடைய அதிகரித்த உடல் எடையால் பாடி ஷேமிங்கிற்கும் ஆளானர். இருப்பினும் தன்னுடைய எடை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பொருட்படுத்தாமல் எப்போதும் பாசிட்டிவ் ஆகவே காணப்பட்டார் மஞ்சிமா.
ஆனால் சமீபத்தில் தன்னுடைய ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு எடையை குறைக்க திட்டமிட்டுள்ளாராம் மஞ்சிமா. " எடையை குறைப்பது சற்று கடினம் தான், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல" கடினமாக உழைத்தால் எதுவும் சாத்தியமே என்று பாசிட்டிவ் ஆன வார்த்தைகளுடன் தான் உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மஞ்சிமா செய்த பயிற்சி பற்றிய விவரங்களையும், அவற்றின் நன்மைகளையும் இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலைகளை, எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
வயது கூடும் போது தசை வலிமையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வது நல்லது. இந்த பயிற்சிகள் ஒட்டுமொத்த உடல் வலிமையை அதிகரிக்கின்றன. இதில் பலவிதமான வலிமை பயிற்சிகள் உள்ளன. உங்களுடைய உடல்நலம் மற்றும் இலக்குகளை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மஞ்சிமா மோகன் செய்த வலிமை பயிற்சிகளின் நன்மைகள் பின்வருமாறு…
இந்த பயிற்சிகள் வலுவான உடலை உருவாக்க உதவுகின்றன. இதைத்தொடர்ந்து செய்து வந்தால் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் உடல் சோர்வடையாமல், ஆற்றலுடன் வலுவாக இருக்கும்.
இந்த வலிமை பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம். இவை உடலின் அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி கலோரிகளையும் எரிக்க உதவுகின்றன.
உங்கள் மனநிலை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க இருப்போன்ற வலிமை பயிற்சிகளை செய்யலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.
தசைகளுக்கான வலிமை பயிற்சியை செய்வதன் மூலம் தசை மற்றும் எலும்புகள் வலிமை பெறுகின்றன. இதனுடன் தோரணையை மேம்படுத்தவும், முதுகு வலியை போக்கவும் இந்த பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பயிற்சிகள் யாவும் உடலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. இதனால் வயதான காலத்திலும் உடல் ஆரோக்கியத்துடன் வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படலாம். மஞ்சிமா மோகனின் வார்த்தைகளும், பயிற்சியும் உங்களுக்கும் பாசிட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கும் உடல் வலிமையுடன், சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் சரியான உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதலுடன் இந்த பயிற்சிகளை செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தேனா, வெல்லமா அல்லது நாட்டு சர்க்கரையா? ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com