
வீட்டில் மொய்க்கும் ஈக்கள் தொல்லை கொடுப்பவை மட்டுமல்ல; அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை பரப்பி, நம் உணவையும், சுற்றுப்புறத்தையும் அசுத்தப்படுத்துகின்றன. இந்த ஈக்கள் சமையலறை, குப்பை தொட்டி, வடிகால் போன்ற ஈரப்பதமான, வெப்பமான இடங்களில் விரைவாக பெருகும். ஆனால், இவற்றை கட்டுப்படுத்த சில எளிய, இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றை இக்குறிப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: உங்கள் வீட்டில் கொசுக்களை தடுப்பது எப்படி? பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க எளிய குறிப்புகள்
வீட்டில் ஈக்களை கட்டுப்படுத்த ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு சிறந்த பொருளாகும். ஒரு சிறிய கண்ணாடி ஜாடியில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றி, அதில் ஒரு துளி பாத்திரம் கழுவும் சோப்பை கலக்கவும். இதில் ஈர்க்கப்படும் ஈக்கள் உள்ளே விழுந்து மூழ்கிவிடும். இந்த ஜாடியை பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடி, அதில் சிறிய துவாரங்களை போடவும். ஈக்கள் இந்த துவாரங்கள் வழியாக உள்ளே செல்லும். ஆனால், வெளியே வர முடியாது. பழங்கள் வைத்திருக்கும் இடம், குப்பை தொட்டி அல்லது சமையலறை சிங்க் அருகில் இதை வைத்தால், சில மணி நேரங்களிலேயே பலன் தெரியும்.

ஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கி, ஒவ்வொரு பாதியிலும் 6-10 கிராம்புகளை குத்தி வைக்கவும். இதை உணவு பொருட்கள் இருக்கும் மேசை, ஜன்னல்கள் அல்லது சமையலறை அலமாரிகள் மீது வைக்கலாம். கிராம்பு மற்றும் எலுமிச்சையின் கலவை ஈக்களை விரட்டுவதோடு, சுற்றுப்புறத்திற்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தையும் தரும்.
மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
துளசி மற்றும் புதினா செடிகளின் வாசனை ஈக்களுக்கு பிடிக்காது. ஜன்னல்கள், கதவுகள் அல்லது சமையலறையில் இந்தச் செடிகளை வைப்பதன் மூலம், ஈக்கள் வீட்டிற்குள் வருவதை தடுக்கலாம். இதன் கூடுதல் நன்மை என்னவென்றால், சமையலுக்கும் இந்த இலைகளை பயன்படுத்தலாம்.
ஒரு கப் பாலுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்தக் கலவையை சிறிய கிண்ணங்களில் ஊற்றி, ஈக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கலாம். இதன் வாசனை ஈக்களை ஈர்க்கும். ஆனால், ஒட்டும் தன்மை கொண்ட இந்தக் கலவை அவற்றை சிக்க வைக்கும்.

அழுக்கான, ஈரமான இடங்களில் ஈக்கள் அதிகமாக வரும். ஈக்கள் வராமல் தடுக்க உங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். சிந்திய உணவை உடனே துடைப்பது, உணவு பொருட்களை மூடி வைப்பது, பாத்திரங்களை உடனே கழுவுவது போன்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டும். குப்பை தொட்டிகள் மற்றும் கழிவுகளை மூடி வைக்க வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றும் போது வீட்டில் ஈக்கள் தொல்லை அதிகமாக இருக்காது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com