உங்கள் வீட்டில் கொசுக்களை தடுப்பது எப்படி? பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க எளிய குறிப்புகள்

கொசுக்கள் மூலம்  டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் அவற்றை வீட்டிற்குள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
image
image

காலநிலை மாற்றம், தேங்கிய நீர், ஈரப்பதம் போன்றவற்றால் கொசுக்கள் பரவுவதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. இந்த சூழ்நிலையில் உங்கள் வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு சில எளிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் சுத்தப்படுத்த வேண்டிய இடங்கள்:

கொசுக்கள் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, உங்கள் வீட்டை சுற்றி நீர் தேங்கும் இடங்களை முதலில் அகற்ற வேண்டும். பூந்தொட்டித் தட்டுகள், வாளிகள் மற்றும் பறவைகளுக்கு நீர் வைக்கும் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். நீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும். குளிர்சாதன பெட்டிகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் வடிகால்களை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யவும்.

mosquito repellent

கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்து வைக்க வேண்டும்:

கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் திரைகளை பொருத்தவும். இதில் இடைவெளிகள் அல்லது கிழிசல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். மேலும், கொசுக்கள் அதிகம் தென்படும் மாலை மற்றும் விடியற்காலை நேரங்களில் ஜன்னல்களை மூடி வைக்கலாம்.

கொசு விரட்டிகளை பயன்படுத்துதல்:

வீட்டில் இருந்து கொசுக்களை விரட்ட நீங்கள் சில தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம். அதன்படி, வேப்ப எண்ணெய், மனம் வீசும் மெழுகுவர்த்திகள், கற்பூரம் மற்றும் துளசி செடிகள் ஆகியவை இயற்கையான தடுப்பான்களாக செயல்படுகின்றன. இவை தவிர திரவ வேப்பரைசர்கள் (liquid vaporizers), கொசுவர்த்தி சுருள்கள் (coils) மற்றும் பிளக்-இன் கருவிகள் (plug-in machines) பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இவற்றை சரியான காற்றோட்டத்துடன் பயன்படுத்துவது அவசியம்.

மேலும் படிக்க: 2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!

வீட்டை தூய்மையாக பராமரித்தல்:

குறைவான வெளிச்சம் மற்றும் ஈரமான பகுதிகள் கொசுக்களை ஈர்க்கின்றன. உங்கள் வீட்டை ஈரப்பதம் இல்லாமலும், காற்றோட்டமாகவும் வைத்திருங்கள். படுக்கை விரிப்புகள் மற்றும் திரைகளை அடிக்கடி மாற்றவும். ஈரமான ஆடைகளை வீட்டிற்குள் தொங்க விடுவதை தவிர்க்கவும். மேலும், குப்பைகளை மூடி வைத்து தினசரி அப்புறப்படுத்துங்கள். உங்கள் பகுதியில் கொசுக்கள் அதிகமாக இருந்தால், உறங்கும் போது கொசுவலைகளை பயன்படுத்துங்கள்.

mosquito issue

வீட்டில் கொசுக்களை தடுப்பது என்பது அவற்றின் இனப்பெருக்க சுழற்சியை உடைத்து, வாழும் இடங்களை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதாகும். தேங்கிய நீரை அகற்றுவதன் வாயிலாகவும், திரைகள் மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலமும் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான, கொசு இல்லாத சூழலை உருவாக்க முடியும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP