பலரது வீடுகளில் இப்போது கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இந்த கரப்பான் பூச்சிகள் உணவையும், பாத்திரங்களையும் அசுத்தப்படுத்துவதோடு, பல்வேறு நோய்த் தொற்றுகளையும் பரப்புகின்றன.
மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
கரப்பான் பூச்சிகள் இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும். அவை எப்போதும் உணவு, தண்ணீர் மற்றும் இருண்ட இடங்களை தேடி அலைகின்றன. எனவே, சமையலறைகள், குளியலறைகள் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் போன்ற இடங்கள் அவற்றின் மறைவிடங்களாக இருக்கின்றன. சிறிய இடுக்குகள் வழியாக ஊடுருவி, விரைவாக இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டிருப்பதால், ஒருமுறை அவை வீட்டுக்குள் வந்துவிட்டால், அவற்றை அகற்றுவது மிகவும் கடினமாக இருக்கும்.
எனவே, கரப்பான் பூச்சிகளை முழுமையாக அகற்றுவதற்கு முன்பு, அவற்றை வீட்டுக்கு வர விடாமல் தடுப்பது அவசியம். உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருத்தல், உணவு பொருட்களை மூடி வைத்தல், தண்ணீர் கசிவுகளை சரிசெய்தல் போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் அவற்றின் மறைவிடங்களை குறைக்கலாம். இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளுடன், கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும் சில எளிய வழிகள் குறித்து காண்போம்.
சமையல் சோடா மற்றும் சர்க்கரை கலவை கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும். சர்க்கரை, கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் ஒரு தூண்டுகோலாக செயல்படுகிறது. அதே சமயம், சமையல் சோடா அதன் செரிமான மண்டலத்தை பாதித்து அவற்றை அழிக்கின்றன. சமையல் சோடா மற்றும் சர்க்கரையை சம அளவு கலந்து, அவற்றை கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் வைத்து விடலாம்.
மேலும் படிக்க: 2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!
பிரிஞ்சி இலைகள், கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும் மற்றொரு இயற்கை மருந்தாகும். இவற்றில் உள்ள ஒருவித வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. காய்ந்த பிரிஞ்சி இலைகளை பொடியாக்கி அலமாரிகள் உள்ளிட்ட இடங்களில் தூவி விடலாம். மேலும், சில பிரிஞ்சி இலைகளை ஒன்றாக சேர்த்து கட்டி, கரப்பான் பூச்சிகள் நுழையும் இடங்களில் வைப்பதன் மூலமும் அவற்றை விரட்டலாம். இது உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் வருவதை தடுக்கும் ஒரு இயற்கை தடுப்பானாக செயல்படுகிறது.
வினிகர் நேரடியாக கரப்பான் பூச்சிகளை அழிக்காது. ஆனால், அதன் கடுமையான வாசனை அவற்றை விரட்ட உதவும். சம அளவு வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து, அதனை சமையலறை, அலமாரிகள், சிங்க் மற்றும் பிற இடங்களை துடைக்க பயன்படுத்தலாம். இது கரப்பான் பூச்சிகளை தடுப்பதோடு, அவற்றை கவரும் உணவு எச்சங்கள் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவற்றை நீக்குகிறது.
போரிக் ஆசிட் கரப்பான் பூச்சிகளை அழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை இன்னும் பயனுள்ளதாக மாற்ற, போரிக் ஆசிட்டை சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வைக்கலாம். இதன் மூலம் கரப்பான் பூச்சிகளின் தொல்லை குறையும். எனினும், போரிக் ஆசிட் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com