நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனுடைய தனித்துவமான சுவையும், மணமும் உணவுக்கு கூடுதல் சுவை தரும்.
சோம்பில் பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த சோம்பை உணவில் சேர்க்கலாம் அல்லது டீ வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். சோம்பு பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆகையால் சோம்பு நீரின் செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக சூடாகவும். இந்த தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அடுப்பை அணைத்தபின் இதனை ஒரு தட்டு வைத்து மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். சோம்பு டீயை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கலாம்.
இதன் நன்மைகளை LNJP மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ஜெயா ஜோஹ்ரி அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். அவர் பகிர்ந்து கொண்ட நன்மைகள் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.
நீங்கள் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகளை அடிக்கடி எதிர்கொண்டால் சோம்பு தண்ணீர் அல்லது டீயை தினமும் குடிக்கலாம். இது இரைப்பை நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தடுக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மலச்சிக்கல் அஜீரணம் உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சோம்பு தண்ணீர் குடிக்கலாம்.
சோம்பில் உள்ள பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் படபடப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
சோம்பு நீர் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? சோம்பில் உள்ள வைட்டமின் A கண்களுக்கு மிகவும் நல்லது.
சோம்பில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தையும் சுத்திகரிக்க உதவுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் திறம்பட உறிஞ்சுவதற்கு சோம்பு டீ உதவியாக இருக்கும்.
மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற சோம்பு டீ அல்லது நீரை குடிக்கலாம். இது மாதவிடாயின் அறிகுறிகளை சமாளிக்கவும் உதவுகிறது. பல பெண்களும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சீராக்க சோம்பு நீர் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வயிறு,சருமம், மார்பக புற்று நோய் போன்ற புற்று நோய்களின் அபாயத்தை சோம்பு குறைக்கிறது. இது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியான ஃப்ரீ ரேடிக்கல்களை உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது.
சோம்பு வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. சோம்பு நீர் அல்லது தீ குடிப்பது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடும் ஆர்வமும் குறைந்து விடும். இதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா
சோம்பு சருமத்திற்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இந்நிலையில் இயற்கையான முகப்பொலிவைப் பெற சோம்பு நீர் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு பல நன்மைகளை அள்ளி தரும் தேன்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com