காயங்களை ஆற்றுவதில் தொடங்கி தொண்டை வலியை சரி செய்வது வரை பலவிதமான பிரச்சனைகளுக்கு தேன் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. உணவுக்கு சுவை அளிப்பதோடு மட்டுமின்றி இது ஏராளமான அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தேனின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திடாதாவர்கள் இருக்க முடியாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனை உணவுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறீர்களா? தேனின் மற்ற பயன்களையும் இப்பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருமலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை உடலை விட்டு அகற்ற உதவுகின்றன. இதில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேனில் இயற்கையான நல்ல நுண்ணுயிர்கள் உள்ளன. இவை சருமத்திற்கு பல வழிகளில் நன்மை தருகின்றன. உங்களுக்கு ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிதளவு தேனை தடவலாம். பிறகு பேண்ட் எய்ட் பயன்படுத்தி காயத்தை மூடிவிடவும். தேன் இயற்கையான ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது, இது காயங்களுக்கு நல்லது.
இன்றைய காலகட்டத்தில் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு தூக்கத்தில் இடையூறுகள் ஏற்படலாம் அல்லது இரவு முழுவதும் தூக்கம் வராமல் போகலாம். தூக்கமின்மைக்கு தேன் ஒரு சிறந்த தீர்வாக
இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து சாப்பிடுவது தூக்கமின்மையை போக்க உதவுகிறது. இது மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலினை மீட்டமைக்க உதவுகிறது.
முகப்பருக்களை நீக்க எளிமையான மற்றும் சிறந்த தீர்வை தேடுகிறீர்களா? உங்களுக்கு தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கவும் தேனை பயன்படுத்தலாம். உங்களுக்கு எப்போதாவது பருக்கள் வந்தால், இயற்கையான நுண்ணுயிர் பண்புகளைக் கொண்ட தேனை பயன்படுத்தலாம். தேனை முகப்பருவின் மீது தடவி, 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு உங்கள் முகத்தை கழுவலாம். இதே செயல்முறையை அடுத்த நாளும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பதட்டத்தை போக்க தேன் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீமை சாமந்தி டீயுடன் ஒரு சிறிய ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். பதட்டத்தை குறைத்து உங்கள் மனதை அமைதி படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைப்பதோடு மட்டுமின்றி, தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகின்றன. கொசுக்கடி மற்றும் அதன் தழும்புகள் உங்களுக்கு சிரமத்தை கொடுத்தால், அந்த தழும்புகள் மீது சிறிதளவு தேன் தடவலாம். இது எரிச்சலை கணிசமாக குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உங்களுக்கு இருமல், தொண்டை புண் அல்லது வலி இருந்தால், தொண்டை புண்ணை ஆற்ற தேனைப் பயன்படுத்தலாம். வீக்கமடைந்த சளி சவ்வுகளை ஆற்றவும், இருமலின் அறிகுறிகளை போக்கவும் தேன் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பழங்கள் சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது? நிபுணர் டிப்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com