ஞாயிறு விடுமுறை விட்டாலே… என்ன உணவுகள் சமைக்கலாம்? என்ற தேடல் பெண்களிடம் அதிகமாக இருக்கும். இட்லி, பூரி, பொங்கல், சப்பாத்தி, சிக்கனில்செய்யக்கூடிய ஸ்பெஷல் உணவுகள் நமது லிஸ்டில் இடம் பெறும். இது எல்லாம் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் என்றாலும், குழந்தைகளுக்கு சிறு தானிய உணவுகளை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.
எனவே இன்றைய சன்டே ஸ்பெஷல்லாக உங்களது குழந்தைகளுக்கு சிறு தானியங்களில் ஒன்றான தினையில் பொங்கல் செய்துக் கொடுக்கவும். இதோ அதற்கான செய்முறை இங்கே…
மேலும் படிங்க: தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!
தேவையான பொருட்கள்:
- தினை அரிசி - 2 கப்
- பாசி பருப்பு - 1 கப்
- நெய் - தேவையான அளவு
- இஞ்சி - பொடியாக நறுக்கியது.
- சீரகம் , மிளகு- 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை
- பச்சை மிளகாய் - 1
செய்முறை
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தினை அரிசி, உடைத்த பாசி பருப்பு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 5 நிமிடங்களுக்குப் பிறகு குக்கரில் 2 கப் தினை அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 2 அல்லது 3 விசில் வரை வைக்கவும்.
- பின்னர் மற்றொரு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு வானலை சூடேற்றவும். சூடானது நெய் ஊற்றி, முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்துள்ள பொங்கலில் ஊற்றினால் போதும் சுவையான தினை பொங்கல் ரெடி.
- வழக்கமாக செய்யும் பொங்கல் போன்றில்லாமல் கூடுதல் சுவையை நமக்கு கொடுக்கும். குழந்தைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு ஏதுவாக அவர்களுக்குப் பிடித்த வடையைக் சூட்டுக்கொடுங்கள் போதும். அதனுடன் சேர்ந்து சாப்பிட்டுவிடுவார்கள்.
- தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.
- இதில் புரதம், இரும்புச்சத்து, மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
- நார்ச்சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்கிறது தினை.
- வைட்டமின் A, வைட்டமின் E, இரும்புச்சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. பருவ கால நோய் தொற்றிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு உதவியாக உள்ளது.
- தினையில் உள்ள மொத்த அமினோ அமிலங்களில் 44.7 சதவீதம் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதால் உங்களது உணவு முறையில் இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்க: நீங்கள் சமைக்கும் சமையலில் ருசியே வரலயா? அப்ப இத பாலோ பண்ணுங்க!
தினை பொங்கலை அடிக்கடி செய்ய வேண்டும் என்பதில்லை. வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு 2 முறை செய்துக் கொடுத்துப் பழக்கவும். வரும் தலைமுறையை ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும் என்றால் சிறு தானிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினை பொங்கலை அடிக்கடி செய்ய வேண்டும் என்பதில்லை. வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு 2 முறை செய்துக் கொடுத்துப் பழக்கவும். வரும் தலைமுறையை ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும் என்றால் சிறு தானிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation