herzindagi
sugarcane for thai pongal

Sugarcane for Pongal 2024: தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!

வாழ்க்கையில் ஏற்பட்ட கவலைகளெல்லாம் மறந்துவிட்டு இனிப்புகளோடு உங்களது புதிய பயணத்தைத் தொடங்குங்கள் என கரும்பின் சுவை உணர்த்துகிறது.
Editorial
Updated:- 2024-01-06, 07:58 IST

வேளாண்மைக்கும், வேளாண் தொழிலுக்கும் உறுதுணையாக இருந்த காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் கொண்டாடக்கூடிய பாரம்பரியமான விழா என்றால் அது தைப்பொங்கல் தான். மார்கழி கடைசி போகி பண்டிகை, தை முதல் நாள் தை பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாள்களும் உழவர்களுக்கான திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆம் முன்பெல்லாம் உழவுத்தொழில் தான் பிரதானமாக இருந்துள்ளது. ஆடி பட்டத்தில் தேடி விதைத்த பயிர்கள் அனைத்தும் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதாவது மார்கழி கடைசியில் உழவர்கள் அறுவடையை மேற்கொள்வார்கள். இதையடுத்து வேளாண்மை தொழிலுக்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாட்டங்களை அவர்களுக்கு ஏற்றவாறு வகுத்துக் கொண்டனர்.

 pongal celebrate in  days

தை முதல் நாள் உழவுக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பின்னர் காளைக்காக மாட்டுப்பொங்கல் வைத்து வழிபடுவார்கள். என்ன தான் இத்திருநாளில் சர்க்கரை பொங்கல் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் கரும்பிற்கும் தனி இடம் உண்டு. ஏன் பொங்களன்று கரும்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? என்ன காரணம்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே…

பொங்கல் தினத்தில் கரும்பின் முக்கியத்துவம்: 

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்!

  • இனிப்பின் அடையாளமாக விளங்குகிறது கரும்பு. உழவர்கள் பயிரிடப்பட்ட கரும்பை 10 மாதங்களுக்குப் பிறகு மார்கழியில் தான் அறுவடை செய்வார்கள். நான்கு நாள்கள் பண்டிகைகளிலும் இது பிரதானமாக இருக்கும். இதுவரை வாழ்க்கையில் பட்ட துயரங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இனிப்புகளோடு உங்களது புதிய பயணத்தைத் தொடங்குங்கள் என கரும்பின் சுவை உணர்த்துவதாக நம் முன்னோர்கள் தெரவிக்கின்றனர்.
  • மேலும் நாம் சாப்பிடக்கூடிய கரும்பில் நுனிக்கரும்பை விட அடிக்கரும்பு தான் அதிக சுவையைக் கொடுக்கும். ஆனால் இதை எளிமையாக சாப்பிட்டு விட முடியாது. சில இன்னல்களையும் நாம் சந்திக்க நேரிடும்.  இதுப்போன்று தான் வாழ்க்கையும். எனவே எந்தவித இன்னல்கள் வந்தாலும் அதைக்  கடந்து செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
  • இதுப்போன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் கரும்பில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே விதவிதமான உணவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. போட்டி போட்டுக்கொண்டு உணவுகளை உட்கொள்வோம். சைவம் மற்றும் அசைவ உணவுகள் அனைத்துமே பொங்கல் திருநாளன்று இடம் பெறும். இதனால் சில நேரங்களில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.  ஆனால் நாம் சாப்பிடும் கரும்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலின் செரிமான அமைப்பை சீராக்குவதற்கும் உதவியாக உள்ளது.

 pongal sugarcane

இவ்வாறு பல்வேறு நன்மைகளைக்  கொண்டுள்ள கரும்புகள் தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல், பரளச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும். இன்னும் பொங்கலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிங்க: விதவிதமான காட்டன் புடவைகளோடு களைக்கட்டும் பொங்கல் திருநாள்!..

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com