
பல ஆண்டுகளாக பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சில உணவுகளுடன் பால் சேர்த்து கொடுக்கும்போது, அது உடலுக்கு தேவையான கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
தினமும் நாம் பயன்படுத்தும் சில காய்கறிகள் மற்றும் உலர் பழங்களை பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை உறுதி செய்ய முடியும். அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
பேரீச்சம்பழத்தில் புரதம், வைட்டமின் B16 மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சோகையை தடுக்கவும் உதவுகின்றன. பேரீச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் பாலுடன் சேர்த்து அரைத்து கொடுப்பது சுவையை அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்துகிறது.

மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் ஒன்றாக உலர் திராட்சை கருதப்படுகிறது. அவற்றை ஊறவைத்து பாலுடன் சேர்க்கும் போது, நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளை செல்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், மன வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், உலர் திராட்சை கலந்த பாலின் இயற்கையான இனிப்பு சுவையை குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
மேலும் படிக்க: உடல் எடை குறைப்பில் முட்டையின் பங்கு; இப்படி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் ஆற்றல் மையம் போன்று அத்திப்பழம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், உள் ஆற்றலை உருவாக்கவும் துணைபுரிகிறது. அதன் இயற்கையான இனிப்பு சுவை காரணமாக, சர்க்கரை சேர்க்காமல் அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து அருந்துவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், மூளை வளர்ச்சிக்கு பங்களிக்கிறது, நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரவில் சில பாதாமை ஊறவைத்து காலையில் பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த கேரட் பெரும்பாலும் பால் ரெசிபிகளில் சேர்க்கப்படுவதில்லை. கேரட்டை துருவி பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, காலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது கண், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இந்த ஆரோக்கியமான பொருட்களை பாலுடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை சேர்க்கலாம். எனினும், உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்து கொடுப்பதை உறுதி செய்யவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com