35 வயதானப் பெண்களே கட்டாயம் மாதுளை சாப்பிட வேண்டும்; இல்லையெனில் எச்சரிக்கும் மருத்துவர்கள்

பெண்களுக்கு 35 வயதானலே இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க கட்டாயம் பாதுளை சாப்பிட வேண்டும் .  
image
image

பெண்கள் எந்தளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறார்களோ? அந்தளவிற்கு குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆம் ஒரு நாள் உடல் நலக்குறைவால் குடும்ப தலைவிகள் தொய்வை சந்தித்தால் போதும். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளும் அப்படியே முடங்கிவிடும். இதனால் தான் குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பது போன்று இல்லையென்றாலும் 5 சதவீதமாவது பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்ட வேண்டும்.


இன்றைக்கு 35 வயதிற்கு மேலான பெண்கள் கட்டாயம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.இந்நிலையில் இவர்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கும் மாதுளை எப்படி பெண்களுக்கு உறுதுணையாக உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

பெண்களுக்கு மாதுளையின் ஆரோக்கிய நன்மைகள்:

இனப்பெருக்க ஆரோக்கியம்:

பெண்கள் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக உள்ளது குழந்தை பேரின்மை. குழந்தை இல்லாத பெண்களுக்காகவே பல்வேறு பிரத்யேக சிகிச்சைகள் இருந்தாலும் பல நேரங்களில் தோல்வியடைகிறது. இதனால் தான் நம்முடை முன்னோர்கள் மாதுளை பழங்களை அதிகளவில் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் பிசிஓஎஸ் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.


தசை மீட்பு:

பெண்களுக்கு வயதாகும் போது தசை பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படும். இதற்காக பல உடற்பயிற்சிகள் இருந்தாலும் ஆரோக்கியமான உணவுகளிலும் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக மாதுளையை உட்கொள்ளும் போது இதில் உள்ள வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்துக்கள் போன்றவை உடலை வலுவாக்கி தசை பிடிப்பு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.

pomegranate benefits

தோல் ஆரோக்கியம்:

பெண்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மாதுளை பழங்கள் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் புற ஊதா கதிர்களால் ஏற்படக்கூடிய சேதத்தையும் சரி செய்கிறது. சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கவும், சரும வறட்சி, கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வருவதையும் தடுக்கிறது.

மேலும் படிக்க:45 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா? இன்றிலிருந்தே வயதான எதிர்ப்பு உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்

முடி வளர்ச்சி:

பெண்களுக்கு குழந்தைப் பிறப்பிற்குப் பின்னதாக முடி உதிர்தல் பிரச்சனை அதிகளவில் ஏற்படும். இவற்றைத் தடுக்க மாதுளை உதவுகிறது. இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்:

மாதுளையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுப்பதோடு இதயம் சீராக செயல்பட உதவுகிறது.

மேலும் படிக்க:குளிர்கால உணவுமுறையில் இந்த 5 உணவுகளை மறக்காம சேர்த்துக்கோங்க

நோய் எதிர்ப்பு சக்தி:


மாதுளை பழங்களில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதோடு வயதாகும் போது ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பையும் சரி செய்ய உதவுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP