
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் இயற்கையான நடைபெறும் ஒரு செயல்முறையாகும். இன்றைய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளைப் பெண்கள் சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பையெல்லாம் தவிர்க்கவும், சீரான மாதவிடாய் வருவதற்கும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் சில பானங்கள் பேருதவியாக இருக்கும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.


வயிற்று வலி, உடல் சூடு, மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளையும் குறைப்பதற்கு வெந்தயம் உதவியாக இருக்கும். முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிப்பை சந்திக்கும் பெண்கள் வெந்தயத்தில் தயாரிக்கப்படும் பானங்களைக் கட்டாயம் பருக வேண்டும். இரண்டு கப் தண்ணீர், நறுக்கிய இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து வடிகட்டி பருக வேண்டும். வெந்தயத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க மதிய உணவு சாப்பிட சரியான நேரம் எது?
பெண்களின் வயிற்று வலி பிரச்சனைக்கும், சீரான மாதவிடாய்க்கும் இஞ்சி உதவுகிறது. உங்களது உணவு முறையில் இஞ்சியைத் தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்ளும் போது, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் முறையற்ற மாதவிடாயையும் சீராக்குகிறது. எனவே இஞ்சியை டீ யாக செய்து பருகலாம் அல்லது இஞ்சி சாற்றை மட்டும் எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடுவதும் நல்லது. மேலும் வெந்தயம், இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சூடான பானம் செய்து குடிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்று வலி போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு சீரக தண்ணீரைக் குடிக்கலாம். தினமும் இரவில் சீரகத்தை ஊற வைத்து காலையில் எழுந்ததும் இதை அப்படியே குடிக்கவும. இது உடல் சூட்டைக் குறைத்து சீரான மாதவிடாயை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: தினமும் 5 ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் போதும் - கொலஸ்ட்ராலை ஈசியா விரட்டிடலாம்!
இதோடு மட்டுமின்றி ஊட்டச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் பெண்கள் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேற்கூறிய பானங்கள் அனைத்தையும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய பேருதவியாக இருக்கும் என்றாலும் கர்ப்பத்தைத் திட்டமிடுபவர்கள் அல்லது கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த பானங்களை உட்கொள்ளக்கூடாது. இதே போன்று பிசிஓடி, பிசிஓஸ் போன்ற மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின் படி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஹார்மோன் சமநிலையை சீராக்கி உடல் நல பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com