எல்லா பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு அவர்களுடைய உணவிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மூளையின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஒரு சில உணவுகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருவதுடன், குழந்தையின் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். மூளையின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: கண்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத உணவுகள்
நிபுணரின் கருத்துப்படி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இது போன்ற உணவுகள் மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் உதவுகின்றன.
இவ்விரண்டும் நல்ல கொழுப்பு மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரம் ஆகும். இவை மூளையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. பிஸ்தாவில் உள்ள லுடீன் எனும் பைட்டோகெமிக்கல் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையை பாதுகாக்கின்றன.
கீரை, முட்டைக்கோஸ், கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் E, K போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
பீன்ஸில் மெக்னீசியம், துத்தநாகம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன. பீன்ஸ் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
முழு தானியங்களான கோதுமை, பார்லி, அரிசி, ஓட்ஸ் போன்ற உணவுகள் வைட்டமின் B இன் சிறந்த ஆதாரமாக இருப்பதால், இவை மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கு நல்லது. தயிர் சாப்பிடுவது செரடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அயோடின் தயிரில் அதிகமாக உள்ளது. இதை தவிர மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம், துத்தநாகம், வைட்டமின் B, செலினியம் போன்ற சத்துக்களும் உள்ளன. எனவே உங்கள் குழந்தைக்கு தினம் ஒரு கப் தயிர் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கீட்டோ டயட் என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் நல்லது தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com