கீட்டோஜெனிக் என்ற சொல் குறைந்த கார்ப் உணவைக் குறிக்கிறது. கீட்டோ டயட்டைப் பின்பற்றுபவர்கள் தங்களுடைய கலோரி தேவைகளை கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளிலிருந்து குறைவாகவும் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவில் இருந்து அதிகமாகவும் பெறுகிறார்கள். தேர்வு செய்து சாப்பிடுவார்கள்.
இதன்படி ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள், போதுமான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை வலியுறுத்துவதே கீட்டோ டயட் ஆகும். கார்போஹைட்ரேட்டுகளை விட நல்ல கொழுப்பிலிருந்து அதிக கலோரிகளை பெறுவதே இந்த டயட்டின் நோக்கமாகும். கீட்டோ டயட் இன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்…
இந்த பதிவும் உதவலாம்: ஓரே வாரத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஒல்லியான இடை அழகு தரும் 5 உணவுகள்!
பொதுவாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிக்கலாம். அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இன்சுலின் அளவுகள் அதிகரிக்கலாம். இந்நிலையில் கொழுப்பை குறைப்பது கடினமாக இருக்கலாம். இது போன்ற சூழலில் இன்சுலின் அளவுகளை கட்டுப்படுத்த கீட்டோ டயட் உதவும். இந்த டயட் மூலம் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகள் பயன்படுத்தப்படும்.
கீட்டோ டயட் ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இந்த டயட்டை பின்பற்றுவதன் மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். மேலும் இவை பிற ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் பசு உணர்வை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
நாள்பட்ட அழற்சியால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் இதற்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான சர்க்கரையை உள்ளடக்கிய இந்த டயட்டை பின்பற்றுவதன் மூலம் அழற்சியின் அளவுகளை குறைக்கலாம். இதை சாத்தியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கீட்டோ டயட் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. இந்தத் திட்டத்தின்படி எடுத்துக் கொள்ளும் உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். அதேசமயம் பசியை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியும் கட்டுக்குள் இருக்கும். இந்தத் திட்டத்தின் படி பசி ஆர்வம் குறைவதால் எடை இழப்பு சுலபமாகிறது.
குறிப்பு
எந்த ஒரு உணவு திட்டத்தையும் பின்பற்றுவதற்கு முன் உங்களுடைய உடல் எடை, இரத்த பரிசோதனை, ஹார்மோன் அளவுகள் போன்ற விஷயங்களை கணக்கில் கொண்டு நிபுணர் பரிந்துரை செய்யும் உங்களுக்கான பிரத்தியேக டயட் பிளானை பின்பற்றுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com