Food For Eye Health : கண்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத உணவுகள்

கண்களின் ஆரோக்கியத்தை காத்திட, கண் பார்வையை மேம்படுத்த இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சில உணவுகளை உண்டு பயன் பெறுங்கள்…

list of foods for eye health protection

கண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோல கண்களை பராமரிப்பதிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியான திரை நேரத்தால் கண்கள் பாதிப்படையும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலம் கண் பார்வையை மேம்படுத்தலாம் மற்றும் கண் சார்ந்த நோய்களையும் தடுக்கலாம். கண்களுக்கு நன்மை பயக்கக்கூடிய உணவுகள் பற்றிய தகவல்களை உணவியல் நிபுணரான மன்பிரித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த உணவுகள் பற்றிய விவரங்களை அறிய பதிவை தொடர்ந்து படிக்கவும்.

  • பாதாமில் வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சியை குறைக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இதற்கு தினமும் காலையில் எழுந்தவுடன் ஐந்து ஊற வைத்த பாதம் சாப்பிடலாம்.
badam for eye health
  • ஆரஞ்சில் உள்ள வைட்டமின் C கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது கண்களை சுற்றி உள்ள இரத்த நாளங்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆரஞ்ச் பழங்களை சாப்பிடுவதால் கண்புரை நோயையும் தடுக்கலாம். ஆரஞ்சை காலை மற்றும் மதிய உணவுக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.
  • உருளைக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் வறட்சியை தடுக்கின்றன. மாலை நேரத்தில் உருளைக்கிழங்கை கொண்டு சாட் செய்து சாப்பிடலாம்.
  • வைட்டமின் E நிறைந்துள்ள சூரியகாந்தி விதைகள் கண்களுக்கு நன்மை தரும். வயது கூடும் பொழுது ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகளை தவிர்த்திட சூரியகாந்தி விதைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம்.
  • தினம் ஒரு கேரட் சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன.
carrot for eye health
  • எடையை குறைக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெந்தயம் உதவும். இதற்கு தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்.
  • கீரை சாப்பிடுவது இரத்த சோகைக்கு மட்டுமின்றி, கண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. கீரையை கடைந்து சாப்பிடலாம் அல்லது தோசை சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
  • காலை உணவிற்கு பிறகு பீட்ரூட் மற்றும் நெல்லிக்காயை கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இதைத் தவிர பீட்ரூட்டை சாலட், ரைத்தா வடிவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பட்டாணி சாப்பிடுவது பல நோய்களிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. பட்டாணியை தனியாக சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அதை பன்னீர், காளான், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம்.
  • வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள் ஃபிரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து கண்களை பாதுகாக்கின்றன. வேர்க்கடலையை வறுத்து சாப்பிடும் பொழுது அதன் மேல் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: சிறுநீர் பாதை தொற்றில் இருந்து விடுபட உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP