நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவற்றை சரியான அளவில் நாம் உட்கொள்ளும் போது உடலில் உள்ள பல உறுப்புகள் சீராக இயங்குவதற்கும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. இந்த வரிசையில் இன்றைக்கு முட்டைக்கோஸில் உள்ள ஊட்டச்சத்துக்களும், இவற்றை ஜூஸாக பருகும் போது எப்படி குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதைப் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ளலாம்..
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், புரதம், பொட்டாசியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், போலிக் ஆசிட், ஜிங்க் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியம், சரும பராமரிப்பு என பலவற்றிற்கு முட்டைக்கோஸ் உதவுகிறது.
குறிப்பாக முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்துகளும், நீர்ச்சத்துகளும் குடலுக்கு பல வகைகளில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதோடு கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடை செய்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
இன்றைக்கு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் சில நேரங்களில் வயிற்று எரிச்சல், அசிடிட்டி போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். மேலும் சாப்பிடக்கூடிய உணவுகள் செரிமானம் ஆவதற்குக் கூட பல மணி நேரம் எடுக்கும். இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் தினமும் காலையில் முட்டைக்கோஸை அரைத்து ஜூஸாக செய்து பருகலாம். ஒருவேளை பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லைமென்றாலும் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் போன்றவற்றை சூப்பாக செய்து சாப்பிடலாம். காலையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் செய்து சாப்பிட முடியவில்லையென்றாலும் இரவு நேரங்களில் செய்து சாப்பிடலாம். குறிப்பாக நாம் வேண்டாம் என்று ஒதுக்கி கீழே தூக்கிப்போடும் மேல் தோல்களை வைத்தும் செய்து சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் கே, ஏ.மற்றும் குளுட்டமைன் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க:எடையை குறைக்க அரிசி வேகவைத்த தண்ணீர் செய்யும் மாயாஜால வித்தைகள்
இதோடு பெருங்குடல் அழற்சி, இரைப்பை அழற்சி போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது தவிர முட்டைக்கோஸ் சாறு அமிலத்தன்மையையும் குறைக்கிறது.
இதர பயன்கள்:
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சல்பர் போனற ஊட்டச்சத்துக்கள் தலை முடியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்கவும், சருமத்தை ஆரோக்கியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க:குளிர்காலம் வந்தாச்சு. மறக்காமல் கர்ப்பிணிகள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
வைட்டமின் சி பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் சாறை தவறாமல் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation