அரிசி நீர் என்பது அரிசியை சமைத்த பிறகு அதில் இருந்து எடுக்கப்படும் கஞ்சி தண்ணீராகும், இவை உடலுக்கு தேவையான மாவுச்சத்துக்களை தருகிறது. ஆரோக்கியமான மற்றும் சரியான உணவு முறைகள் வழியில் உடல் எடை குறைப்பதற்கு சமையலறையில் இருக்கும் பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் நல்ல பலனை தருகிறது. மல்டிஃபிட்டின் ஊட்டச்சத்து நிபுணரான ரோஹித் வாக்மரே என்ற நிபுணரிடம், எடை இழப்புக்கு அரிசியில் இருந்து எடுக்கப்படும் கஞ்சி தண்ணீர் எப்படி பயன்படுத்தலாம் என்ற வழிகளை கூறுகிறார். அவற்றை பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
எடை எடையை குறைக்க மக்கள் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இதில் அரிசியை வேகவைத்த தண்ணீரை கொண்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்ற வழிகளைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: படுக்கைக்கு முன் கால்களைக் கழுவிக் கொண்ட தூங்கச் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்
வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் அரிசியில் இருந்து எடுக்கப்படும் கஞ்சி தண்ணீரை குடித்து நாளைத் தொடங்கவும். இந்த தண்ணீரானது நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்த செய்கிறது. மேலும் உடலுக்கு மறைமுகமாகக் குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது.
Image Credit: Freepik
உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் அரிசி தண்ணீரைக் குடிப்பதால், நம் உணவு உட்கொள்ளலை 10-15% குறைக்கும் சக்தி கஞ்சி தண்ணீருக்கு இருக்கிறது. அரிசி தண்ணீரில் இருக்கும் குறைந்த கலோரி, அதிக நீர் உள்ளடக்கங்கள் ஒட்டுமொத்த உடல் கலோரி நுகர்வு குறைவாக இருப்பதை உறுதிசெய்ய உதவும்.
Image Credit: Freepik
மேலும் படிக்க: குளிர்காலத்தில் இந்த 5 வகையான ஊறவைத்த விதைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com