கோலகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்துக்கு பிள்ளையாருக்கு அமைக்கப்படும் அழகிய பந்தல்கள்

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இருக்கிறோம். இந்துக்களில் அனைத்து விடுகளில் நாளை பிள்ளையார் இருப்பார். விநாயகரை விதவிதமாக அலங்கரித்து மக்கள் பூஜை செய்வார்கள். அப்படி செய்யக்கூடிய பந்தல் அலங்கரத்தை பார்க்கலாம் 
image
image

விநாயகர் சதுர்த்திக்கு என்பது இந்துகள் வீடுகளில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகைக்கு பல வடிவங்களில் பிள்ளையாரை வைத்தி வழிப்பாடுவார்கள் மக்கள். குறிப்பாக பல கணபது, வீர கணபது, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மற்றும் மகா கணபதி, இது போன்ற பல வகையாக விநாயகரை வாங்கி மக்கள் வீட்டில், கோவிலில், வேலை செய்யும் இடங்களில் மற்றும் அலுவலங்களில் வைத்து வழிபடுவார்கள்.

மக்கள் விநாயகர் சதுர்த்தை கொண்டாடும் முறையில், அவர் இருக்கும் இடத்தையும் அழகிய பந்தல் அமைத்து அதில் ராஜாவாக அமர வைப்பார்கள். குறிப்பாக, மக்கள் தனக்கு பிடித்த வகையில், பக்தியை வெளிக்காட்டும் வகையில் பிள்ளையாருக்கு ராஜா அலங்காரத்தை செய்வார்கள். எளிமையான மக்களும் இருப்பதை வைத்து விநாயகர் அமரக்கூடிய பந்தலை வடிவமைப்பார்கள். அப்படி அமைக்கக்கூடிய சில பந்தல் வகைகளை பார்க்கலாம்.

வெள்ளை பூ பந்தல் ஆலங்கராம்

வெள்ளை பூக்கள் பந்தல் ஆலங்காரத்தில் சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறார் பிள்ளையார். தமிழக மக்கள் இந்த அலங்காரத்தை செய்ய நமக்கு தெரிந்த பூக்களான வெள்ளை ரோஜா இதழ்கள், சம்பங்கி பூக்களை எடுத்துக்கொள்ளலாம். பந்தல் அமைக்க மேல்புத்தில் அருகம்புல்லை பயன்படுத்தலாம். இப்படி உங்கள் பந்தலை அமைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பிள்ளையாருக்கு சரியான தேர்வாக இருக்கும்.

vinayagar pandal

சாமந்தி பந்தல்

பிள்ளையாருக்கு சாமந்தி மலர்களை கொண்டு அழகான பந்தல் அமைக்கலாம். இதற்கு முதலில் சாமந்தி மற்றும் சிவப்பு ரோஜாவை எடுத்த மாலையாக கட்டுக்கொள்ள வேண்டும். விநாயகர் வைக்கவேண்டிய பின்புறத்தில் நில நிற துணி மைத்து, அதில் மல்லி பூக்களை கொண்டு தோறனம் அமைக்க வேண்டும். சமந்து மாலையை பிள்ளையாருக்கு பந்தல் போன்று அமைக்க வேண்டும்.

vinayagar pandal 1

வண்ண ரோஜாக்கள் பந்தல்

விநாயகர் வைக்க வேண்டிய பின்புறத்தில் மல்லி பூக்களை கொண்டு வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். மல்லி பூக்களின் மையப்பகுதியில் தங்க நிற மணிகளை கொண்டு அழகுப்படுத்தலாம். பின்னர் பந்தல் அமைக்க பல வண்ண வடிவ ரோஜாக்களை எடுத்து, அதனுடன் ஜிப்சி பூக்கள் மற்றும் இலைகள் கொண்டு அமைக்கலாம்.

vinayagar pandal 2

மேலும் படிக்க: பிள்ளையார் சதுர்த்தி நாளில் பல பெயர்களாடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விநாயகர்.!

வண்ண சாமந்து பந்தல்

மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ண சாமந்தி பூக்களை வைத்து செய்யக்கூடிய இந்த பந்தல் எளிமையாது மற்றும் அழகாக இருக்கும். பிள்ளையாருக்கு பின் புறத்தில் வெள்ளை நிற துணியை கொண்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் இரண்டு நிற சாமந்திகொண்டு பந்தல் அமைக்க வேண்டும். இது பார்க்க மங்களகரமாக தோன்றும்

vinayagar pandal 3

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP