உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நார்ச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. நார்ச்சத்துக்களை கரையக்கூடியது, கரையாதது என இரு வகை படுத்தலாம். ஓட்ஸ், பார்லி, பாதாம், விதைகள், பட்டாணி, காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இது போன்ற உணவுகள் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு செரிமான செயல்முறையை தாமதப்படுத்துகின்றன. இவற்றை ஜீரணிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதால், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் நிறைவாக உணர்வீர்கள்.
பருப்பு வகைகள், வாழைப்பழம், ஆப்பிள், முழு தானியங்கள், பார்லி, பச்சை பட்டாணி, ராகி, பாதாம், வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல் முறையை மேம்படுத்தலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளின் ஐந்து சிறந்த ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் எடையை குறைத்திடலாம்!
நார்ச்சத்துக்கள் நிறைந்த பயறு பருப்பு வகைகள், பெர்ரி வகைகள், முழு தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கின்றன. இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்து வர செரிமான செயல்முறை சீராக நடைபெறும். இதனுடன் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "The Journal of Nutrition and Metabolism" என்ற ஆய்வின்படி நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது நார்ச்சத்துக்களுடன் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவு சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்க உதவுகின்றன. பீன்ஸ், ஆளி விதைகள் போன்ற உணவுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்கின்றன. இவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், அழற்சியை குறைக்கவும் உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்து வர இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சருமம் இயற்கையான பொலிவைப் பெறும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய், ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்து வர வயது முதிர்வின் அறிகுறிகளையும் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கஷ்டமே இல்லை! கை சதை குறைய இந்த 3 பயிற்சிகளை செய்தால் போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com