நெய்யில் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. காலம் காலமாக நாம் சமைலுக்கு பயன்படுத்தும் நெய் நம்மை உள்ளிருந்து அழகாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பல பிரபலங்களும் தங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி நெய்யில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. நெய்யின் கொழுப்பில் உள்ள கரையக்கூடிய வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, D, K, E மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள உணவுக் கொழுப்பு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான சிறந்த மூலப்பொருளாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்:வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
தினமும் ஒரு டீஸ்பூன் சுத்தமான பசு நெய்யை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம். நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த ஆதாரமாகும். இதனுடன் மஞ்சள் சேரும் பொழுது, இந்த ஆன்டி வைரல் கலவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் அழற்சி மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும். மேலும் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
பசும் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யில் புரதம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை காலையில் எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடலின் செல்கள் புத்துயிர் பெறும்.
காலையில் சிறிதளவு நெய் எடுத்துக் கொள்வது, செரிமான செயல்முறையின் போது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. இது இரைப்பை குடல் பாதையில் அமில PH அளவுகளை குறைக்கிறது. இதனால் செரிமானமும், வளர்ச்சிதை மாற்றமும் சீராக இருக்கும். நெய் மலமிளக்கியாக செயல்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பேக் செய்யப்பட்ட ரீபைன்ட் ஆயில்களை ஒப்பிடும்பொழுது வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான பசும் நெய் ஆரோக்கியமானது. இது தினசரி உடலுக்கு தேவைப்படும் நிறைவுற்ற கொழுப்பின் நல்ல ஆதாரமாகும். இதை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
நெய்யில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கின்றனர். இதனால் கொழுப்புகள் அற்ற உணவு முறையை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களும் உடல் ஆரோக்கியதிற்கு அவசியமானவை.
இந்நிலையில் இதில் ஒரு சில வகை உணவுகளை மட்டும் தவிர்ப்பது எடை இழப்புக்கு நிரந்தர பலன் தராது. எனவே நீங்கள் ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். பொறிக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள நெய் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். நெய் கொழுப்பில் கரையக்கூடிய நச்சுக்களை செல்களில் இருந்து வெளியேற்றி வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இந்த செயல்முறையால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறும்.
நெய்யில் உள்ள ப்யூட்ரேட் எனும் கொழுப்பு அமிலம் வீக்கத்தை குறைக்க உதவும். இது இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை தரும் பச்சை பீன்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com