உடல் எடையை வேகமாக குறைக்க பின்வரும் ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றலாம்.
உங்களுடைய நாளின் மிகப்பெரிய உணவை பகல் வேளையில் சாப்பிடுங்கள். ஏனெனில் இரவு வேளையில் கடினமான உணவுகளை சாப்பிடுவது உங்கள் செரிமான மண்டலத்திற்கு கூடுதல் சுமையாக இருக்கலாம். சூரியன் அஸ்தமனத்திற்கு முன்பு உங்களுடைய நாளின் கடைசி உணவை சாப்பிட வேண்டும். எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் உணவை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இரவில் சரியான அளவுகளில், அதே சமயம் சரியான நேரத்தில் உணவை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது குடலின் செயல்பாட்டை தூண்டுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி உங்களை புத்துணர்ச்சியுடன் செயல்பட அனுமதிக்கிறது.
ஆரோக்கியமான எடை இழப்புக்கு தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வியர்வை வெளியேறும் விதத்தில் தினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
தினமும் ஐந்து முதல் பத்து நிமிடங்களாவது இதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். உடல் மற்றும் மனதை அமைதி படுத்த யோகா தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம். இது மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். இதன் மூலம் மன மன அழுத்தத்தினால் அதிகரிக்கும் உடல் எடையை தடுக்கலாம்.
தினமும் மூன்று வேளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இடையில் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். உணவு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது, இந்நிலையில் அதிகப்படியான உணவு உட்கொள்ளலால் கொழுப்பை குறைப்பது கடினமாகிவிடும். காலை உணவை 7:30 -9:30 மணிக்குள் சாப்பிடலாம். அதற்குப் பிறகு மதிய உணவை 11:00 -2:00 மணிக்குள் சாப்பிடலாம். அன்றைய நாளின் இறுதி உணவான இரவு உணவை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. போதுமானவரை இரவு 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிடுங்கள்.
அந்தந்த பருவ நிலைக்கு ஏற்ற பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது. இதுபோன்ற பருவ கால உணவுகள், அந்தந்த வானிலைக்கு தகுந்தவாறு நம் உடலை பராமரிக்கவும், பாத்துகாக்கவும் உதவுகின்றன.
அறுசுவைக்களான இனிப்பு, புளிப்பு, உப்பு, காரமான, கசப்பான மற்றும் துவர்ப்பை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு சுவைகள் எரியும் தன்மை கொண்டவை, எனவே இவற்றை சமநிலைப்படுத்த மற்ற மூன்று சுவைகளும் தேவைப்படுகிறது. எதையும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு வேலை உணவிற்குப் பிறகும் ஒரு சிறிய நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இது உங்கள் செரிமானத்தை தூண்டுகிறது. குறிப்பாக மதிய வேளை உணவிற்குப் பிறகு 10-20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. மதிய வேளையில் சிறிய தூக்கம் அவசியமெனில் 10 நிமிட நடைப்பயிற்சிக்கு பிறகு, இடது புறமாக படுக்கலாம். இது உங்கள் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா
இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வதும் அதிகாலை சீக்கிரம் எழுவதும் உங்கள் ஹார்மோன்களை சம நிலையாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதிக நேரம் போன் திரையைப் பார்ப்பதால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். திரை நேரத்தை குறைத்து இரவு சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும், மறுநாள் காலையில் உங்களை தயார்படுத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com