ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செரிமானம் முதல் மனநிலை வரை பல விஷயங்களும் ஹார்மோன்களை சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளாத நிலையில் ஹார்மோன் அளவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். எனவே ஹார்மோன்களை ஆரோக்கியமாகவும் சமநிலையாகவும் வைத்துக்கொள்ள சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன், சீரான உணவுத் திட்டத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
ஹார்மோன்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான உணவுகளை பற்றி உணவியல் நிபுணரான மன்பிரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஹார்மோன் சமநிலை இன்மை பிரச்சனை உடையவர்கள் இந்த ஒரு நாள் டயட் பிளானை தினமும் கடைபிடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிக்கலாம். இதனுடன் ஊற வைத்த நட்ஸ் வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 3-4 திராட்சைகள், 1 பிரேசில் நட் மற்றும் 5 பாதாமை சாப்பிடலாம். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திடீரெனே உயரும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும், தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
காலை உணவாக புளிக்க வைக்கப்பட்ட மாவில் தயார் செய்த தினை தோசை சாப்பிடலாம். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த இது மிகவும் நல்லது.
உங்களுக்கு பிடித்த பழங்களை சாப்பிடலாம். இதன் மீது ஹலீம் விதைகளை தூவி சாப்பிடவும். 1/4 டீஸ்பூன் ஹலீம் விதைகளை எடுத்துக் கொள்ளவும். இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும்.
மதிய உணவில் முளை கட்டிய பயறை சேர்த்து கொள்ளவும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தவும், எடை குறைக்கவும் உதவுகிறது.
மாலை சிற்றுண்டிக்கு கொக்கோ ஆன்டிஆக்ஸிடன்ட் ஸ்மூத்தி சாப்பிடலாம். இது மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது மற்றும் செரோடோனின் (மகிழ்ச்சியான ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது. இந்த ஸ்மூத்தியை மிக எளிதாக செய்யலாம்.
இரவு உணவுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு சாட் சாப்பிடலாம். இது தவிர காய்கறிகள் சேர்த்து தினை கிச்சடி செய்யலாம். இது மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரம் ஆகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது.
இரவு உணவுக்குப் பிறகு சீமைசாமந்தி டீ குடிக்கலாம். அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் சேர்க்கவும். இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தூக்க ஹார்மோன்களின் வெளியீட்டை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு அளவில்லா நன்மைகளை அள்ளித் தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com