ஒரு பெண்ணின் வயதிற்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய மாறுதல்களை சமாளிக்க ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதுடன் உணவு முறையிலும் கூடுதல் அக்கறை செலுத்தினால் என்றும் ஆரோக்கியத்துடன் நீண்ட காலத்திற்கு வாழலாம்.
ஆரோக்கியமான உணவுகள் பற்றி பேசுகையில் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான உணவுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் சர்க்கரைவள்ளி கிழங்கும் நிச்சயம் இடம்பெறும். இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சர்க்கரைவள்ளி கிழங்கை பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து வர ஒன்றல்ல ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது பற்றிய தகவல்களை மத்திய அரசின் மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ரித்து பூரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பை கட்டி எதனால் வருகிறது தெரியுமா?
சரும அமைப்புக்கு வைட்டமின் A மிகவும் அத்தியாவசியமானது. இந்நிலையில் வைட்டமின் A நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து வர சரும அமைப்பு மேம்படும். இன்று பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் இந்த வைட்டமின் A அல்லது ரெட்டினால் சேர்க்கப்படுகின்றன. இது இளமையான, பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் உங்கள் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் இரும்புச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பெண்கள் தங்கள் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வர, உடலின் ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரிக்கலாம். மேலும் பெண்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் இது உதவும். இதன் மூலம் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை பெண்கள் தவிர்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க கர்ப்பிணிகளும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின் A கருவுறுதலையும் பெண்களின் இனப்பெருக்க செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. ஆகையால் பெண்கள் தவறாமல் சர்க்கரை வள்ளி கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருத்தரிப்பதில் சிக்கல் அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட தொடங்கலாம். இதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
ஆண்களிடம் ஒப்பிடுகையில் பெண்களே மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அலுவலக வேலை முதல் வீட்டு வேலை வரை பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. ஆகையால் மன அழுத்தத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: கடல் உணவுகளில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com