பல் வலியை தாங்கிக்கொள்வது சற்று கடினம்தான், ஏனெனில் பல்வலி அதிகரிக்கும்பொழுது கண், காது மற்றும் தலைவலியும் உடன் வந்துவிடும். ஒரு சிலருக்கு அடிக்கடியும் பல் வலி ஏற்படுகிறது இந்நிலையில் பல் வலியிலிருந்து விடுபட வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது நல்லதல்ல. வலி அதிகரிக்கும் பொழுது கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் லேசான வலி மட்டுமே இருந்தால், சில எளிய வீட்டு குறிப்புகளின் உதவியுடன் இதிலிருந்து விடுபட முடியும்.
உப்பு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது தொண்டை வலிக்கு மட்டுமின்றி பல் வலிக்கும் உதவும். இது இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுகிறது. பற்களின் இடையே ஏதாவது உணவு துகள்கள் சிக்கி, அதனால் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பை கட்டி எதனால் வருகிறது தெரியுமா?
உங்கள் பற்களுக்காக ஏதாவது சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும் பொழுது, வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். இதிலிருந்து விடுபட மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஐஸ் பேக் ஒத்தடமும் கொடுக்கலாம். ஐஸ் கியூப்களை ஒரு துணியில் சுற்றி வலி உள்ள இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
பல் வலியை சரி செய்வதில் பூண்டு நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதனை வலி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவும். இதற்கு பதிலாக பச்சை பூண்டை மென்றும் சாப்பிடலாம். இவ்வாறு மென்று சாப்பிடும் பொழுது பூண்டின் சாறு வலி உள்ள இடத்தில் படும்படி மெதுவாக சாப்பிடவும்.
உங்கள் ஈறுகள் கூச்சத் தன்மை அல்லது வலியுடன் இருந்தால், சில துளி பெப்பர்மென்ட் எண்ணெயை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
உணவுத் துகள்கள் ஏதேனும் பற்களில் இடையில் மாட்டி வலி ஏற்பட்டால், மவுத்வாஷ் மற்றும் ஃப்லாஸ் பயன்படுத்துவது இதற்கான சிறந்த தீர்வாக இருக்கும்.
பல் வலியிலிருந்து விடுபட கிராம்பு அல்லது அதன் எண்ணெயையும் பயன்படுத்தலாம். ஒரு சில துளி கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து வலி உள்ள பற்களின் மீது வைக்கலாம். இதற்கு பதிலாக வலி உள்ள பற்களுக்கு இடையே கிராம்பை வைத்தும் கடிக்கலாம்.
கொய்யா இலைகளும் பல்வலிக்கு நிவாரணம் தரும். கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல்வலிக்கு பயனுள்ளதாக இருக்கும். கொய்யா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரினால் வாய் கொப்பளிக்கலாம்.
பல் வலி கடுமையானதாக இருந்தால் மருத்துவரை தாமதிக்காமல் ஆலோசனை செய்யவும். இது போன்ற கடுமையான வலிக்கு வீட்டு வைத்தியத்தை விட மருத்துவ ஆலோசனையே சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: கடல் உணவுகளில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com