ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி போதுமான தூக்கம் மற்றும் காலையில் சீக்கிரம் எழும்பழக்கம் போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். இதனுடன் உங்களுடைய உணவில் ஒரு சில உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற உலர் பழங்கள் அல்லது நட்ஸ் வகைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை பலரும் கடைபிடிக்கிறார்கள். இவ்வாறு ஊறவைத்து சாப்பிடும் நட்ஸ் வகைகளில் பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு முழுவதும் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம் இது குறித்த தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதற்கான சரியான முறையைப் பற்றி நிபுணர் விளக்கியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: உருளைக்கிழங்கின் தனித்துவமான நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
பெரும்பாலானவர்கள் பேரிச்சம்பழங்கள் சூடான விளைவை கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. நிபுணரின் கருத்துப்படி பேரிச்சம் பழங்கள் மிகவும் குளிர்ச்சியான, இனிப்பு சுவை மிக்க ஒரு பழமாகும்.
பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
ஆரம்பத்தில் இரண்டு மட்டுமே சாப்பிடவும். பின்பு தினமும் நான்கு ஊற வைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடலாம்.
செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் இல்லாதவர்கள், உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் தினமும் நான்கு பேரிச்ச பழங்களை சாப்பிடலாம்.
பேரிச்சம்பழத்தை ஊற வைப்பதால் அதில் உள்ள ஃபைட் அமிலத்தை வெளியேற்றலாம். இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் எளிதாகும். மேலும் ஊறவைத்த பேரிச்சம்பழங்கள் எளிதில் ஜீரணமாகும்.
பேரிச்சம் பழத்தின் சுவை மற்றும் முழுமையான ஊட்டச்சத்தை பெற அதை குறைந்தது 8-10 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பேரிச்சம் பழங்களை சாப்பிட கொடுக்கலாம். குறைந்த உடல் எடை, ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகளுக்கு 2-3 மாதங்களுக்கு தொடர்ந்து பேரிச்சம்பழங்களை சாப்பிட கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இனி சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தும் பொழுது மிளகையும் தவறாமல் சேர்த்துக்கோங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com