
புரதச்சத்தை எளிதாக பெற வேண்டுமானால் அதற்கு மிகச் சிறந்த தேர்வாக விளங்குவது முட்டை. உடற்பயிற்சி செய்பவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரின் உணவிலும் முட்டை ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எனினும், ஒரு கேள்வி பல நாட்களாக விவாதிக்கப்படுகிறது. முட்டையை வேகவைத்து சாப்பிடுவது நல்லதா அல்லது அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லதா? என்ற கேள்வி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: ஆளி விதை தரும் அதிசய பலன்கள் தெரியுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
நமக்கு பிடித்தமான வடிவில் முட்டையை சாப்பிடலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதனை எப்படி சாப்பிடும் போது அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும், எப்படி சாப்பிடும் போது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். அதன்படி, முட்டையை எப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று இதில் பார்க்கலாம்.
முட்டையை ஒரு முழுமையான புரத சுரங்கம் என்று அழைக்கலாம். அதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ஆனால், நீங்கள் முட்டையை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், எவ்வளவு புரதத்தை உங்கள் உடல் உறிந்து கொள்கிறது என தீர்மானிக்கப்படுகிறது.
சமைக்காத பச்சையான முட்டையில் உள்ள புரதத்தில் சுமார் 51% மட்டுமே உடலால் உறிந்து கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், முட்டையை வேகவைக்கும்போது, கிட்டத்தட்ட 91% புரதத்தை உடல் எடுத்துக் கொள்கிறது. அதாவது, வேகவைத்த முட்டையில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு புரத பயன்கள் கிடைக்கின்றன.
குறைந்த புரதச்சத்து: பச்சையான முட்டையில் 'அவிடின்' (Avidin) என்ற புரதம் உள்ளது. இது பயோட்டின் (Vitamin B7) என்ற வைட்டமினை உடல் உறிந்து கொள்ளவிடாமல் தடுக்கிறது. பயோட்டின் முடி, சருமம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. முட்டையை சமைப்பதன் மூலம் இந்த அவிடின் செயலிழந்து, பயோட்டின் முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
பாக்டீரியா: சமைக்காத முட்டைகளில் சால்மோனெல்லா (Salmonella) என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா ஆபத்து உள்ளது. இது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முட்டையை வேகவைப்பதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

அதிக புரதச்சத்து: வேகவைத்த முட்டை, பச்சையான முட்டையை விட ஏறத்தாழ இரு மடங்கு புரதத்தை உடலுக்கு தருகிறது. இது தசைகளின் வலிமை, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு: வேகவைக்கும் போது முட்டையில் உள்ள சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இதனால் இது அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பானது ஆகும்.
எளிதான மற்றும் சுலபமான சிற்றுண்டி: வேகவைத்த முட்டையை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். அலுவலகம், பள்ளி அல்லது பயணத்தின் போது இது ஒரு சிறந்த மற்றும் உடனடி சிற்றுண்டியாகும். இதற்கு வேறு எந்த பொருட்களும் தேவையில்லை.
குறைவான கலோரிகள்: எண்ணெய் அல்லது மசாலா சேர்க்காமல் வேகவைத்த முட்டையை சாப்பிடும்போது, அதில் கலோரிகள் குறைவாக இருக்கும். இது உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
சத்துகள், பாதுகாப்பு மற்றும் சுவை ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டால், முட்டையை வேகவைத்து சாப்பிடுவது தான் மிகச் சிறந்த வழியாகும். இது உங்களுக்கு அதிக புரதத்தையும், பாதுகாப்பான உணவையும் அளிக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com