
Skin Glowing Tips: குளிர்காலம் தொடங்கிவிட்டால், பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலை சரும வறட்சி. காற்றில் ஈரப்பதம் குறைவது மற்றும் குளிர்ந்த காற்று வீசுவது போன்றவற்றால் நமது சருமம் அதன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்கிறது. இதனால் முகம் பொலிவிழந்து, வறண்டு, சில நேரங்களில் வெடிப்புடனும் காணப்படும். விலை உயர்ந்த மாய்ஸ்சரைசர்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தினாலும், அது தற்காலிக தீர்வை மட்டுமே தரும்.
உண்மையான அழகு என்பது உள்ளிருந்து வர வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுவே நம் சருமத்தில் பிரதிபலிக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க, சில குறிப்பிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்ப்பது அவசியம். உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் அளித்து, இயற்கையாகவே முகத்தை பொலிவாக்க உதவும் 5 முக்கிய உணவுகளை பற்றி இதில் காண்போம்.
குளிர்காலத்தில் இயற்கையாகவே கிடைக்கக் கூடிய பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.
மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த குறிப்புகளை அவசியம் பின்பற்றவும்
முகத்திற்கு தேவையான 'பிங்க் க்ளோ' (Pink Glow) வேண்டுமென்றால், பீட்ரூட் மிகச் சிறந்த தேர்வு. இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

கேரட் கண்களுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகச் சிறந்தது. குளிர்காலத்தில் சருமம் சீரற்ற நிலையில் மாறுவதை தடுக்க இது உதவும்.
மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்
இது குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு உணவு என்று கூறலாம். இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது.

கீரை வகை உணவுகளை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான சருமத்தை பெற முடியாது. அதில் பசலைக்கீரை முதன்மையான இடத்தை பெறுகிறது.
இந்த உணவுகளை உங்கள் தினசரி டயட்டில் சேர்ப்பதுடன், குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம். வெளிப்புறக் கிரீம்களை விட, நாம் உண்ணும் இந்த இயற்கையான உணவுகளே சருமத்திற்கு நிரந்தர பொலிவை தரும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com