
இன்றைய காலகட்டத்தில் வாரத்தில் ஒரு சில நாட்களாவது வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக மாறிவிட்டது. எண்ணெய் மற்றும் காரம் அதிகம் சேர்த்து சமைக்கப்படும் வெளி உணவுகளால் செரிமான மண்டலம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதில் வாயு, அஜீரணம், உப்புசம் போன்ற பிரச்சனைகளும் அடங்கும்.
வெளி உணவுகள் சாப்பிடுவதை போதுமானவரை தவிர்க்கவும் பச்சை இலை காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். இதற்கு உதவுக்கூடிய நான்கு சிறந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பை குறைய, உங்கள் காலை உணவில் இந்த மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்!
இந்த பட்டியலில் முதலிடம் பெறுவது தயிர். இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கின்றன. புரோபயோடிக் உணவான தயிர் வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமான மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. தயிர் வாயு சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

பல நோய்களை தீர்க்கும் ஒரு அரு மருந்து பப்பாளி. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த பழமானது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கின்றன. இது வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கும் நன்மை தரும்.
நோய்களை விரட்ட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன. ஆப்பிள் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும், செரிமான மண்டலம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் ஏராளமான நற்பண்புகளும் உள்ளன. வாயுவை நீக்கவும் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தவும் சோம்பு உதவும். இது குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நன்மை தரும். மேலும் இதில் உள்ள வைட்டமின் E கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் சோம்பு டீ எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்கும் 3 பிரிட்ஜ் பயிற்சிகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com