உங்களுக்குப் பிடித்த ஆடையை அணிய தொப்பை ஒரு தடையாக உள்ளதா? தொப்பையை மறைக்க முயற்சி செய்வதற்கு பதிலாக, அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து தீர்வு காணுங்கள். ஏனெனில் இது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, வயிற்றில் கொழுப்பு சேருவது மோசமான ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை தவிர ஒரு சில உடல் நல பிரச்சனைகளாலும் தொப்பை வரலாம். மன அழுத்தம் முதல் ஹார்மோன் சமநிலையின்மை வரை வயிற்றில் கொழுப்பு சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
தொப்பையை குறைக்க உணவு முறையில் சரியான மாற்றங்களை செய்ய வேண்டும். குறிப்பாக உங்களுடைய காலை உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான மன்பிரித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்கும் 3 பிரிட்ஜ் பயிற்சிகள்!
காலை உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
உங்களுடைய காலை உணவில் நிறைய புரதங்களை சேர்த்துக் கொள்ளவும். கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிக்கலாம். இதனால் இன்சுலின் வெளியிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலிலும் கொழுப்பு சேர தொடங்கிவிடும். இதைத் தவிர்க்க புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும். மேலும் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதனால் கொழுப்பை எரிப்பதும் சுலபமாகும்.
காலை உணவில் புரதத்தை சேர்த்துக் கொள்வதற்கான வழிகள்
- உங்களுடைய காலை உணவில் புரதத்தை சேர்த்துக் கொள்ள பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்.
- உங்களுடைய காலை உணவாக அவல் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதில் சிறிதளவு வேர்க்கடலை, பயறு அல்லது முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் செய்யும் எந்த உப்புமாவிலும் இது போன்ற மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தை பெற முடியும்.
- காலை உணவாக சப்பாத்தி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அதனுடன் சிறிதளவு கடலை மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் பன்னீர், பட்டாணி போன்றவற்றை ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.
- நீங்கள் இட்லி அல்லது தோசையை சாப்பிடுகிறீர்கள் என்றால் வேர்க்கடலையை சட்னியாக செய்து எடுத்துக் கொள்ளவும்.
- இதைத் தவிர காலை உணவில் ஏதேனும் கஞ்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இதை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்ற கஞ்சியில் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் இருக்கக்கூடிய புரதத்தின் அளவுகளை அதிகரிக்க காய்கறிகளின் கலவையையும் பயன்படுத்தலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம்.
- பச்சைப்பயிறு தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம், இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
- நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுடன் பன்னீரையும் ஒரு பகுதியாக சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation