புளி ரசமா சாப்பிட்டு கடுப்பா இருக்கா? இனி இந்த மாதிரி பீட்ரூட் ரசம் ட்ரை பண்ணுங்க!

மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.

tips to make beetroot rasam

சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி வந்தால் போதும் மிளகு தட்டிப்போட்டு ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு உடலுக்கு பல வகைகளில் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் வல்லமைக் கொண்டது ரசம். ஆனால் நம்மில் பலருக்கு ரசமா, இந்த விஷப் பரிட்சை வேண்டாமே? என அலறி அடித்து ஓடிவிடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து வழக்கம் போல் செய்யும் ரசத்தை வெறுக்கும் நபர்களுக்காகவே, ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளைக் கொண்டு ரசம் செய்துக்கொடுக்கலாம்.

அது என்ன காய்கறிகளில் ரசமா? என கேட்கிறீர்களா? ஆம் புரதம், நீர்ச்சத்து, ஒமேகா 3அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள பீட்ரூட்டை வைத்து உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பீட்ரூட் ரசம் செய்யலாம். இதோ எப்படி செய்ய வேண்டும்? என்பதற்கான சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.

healthy drink  rasam making

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பீட்ரூட் ரசம்:

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் - 2
  • தக்காளி - 2
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு- அரை டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
  • கடுகு, கறிவேப்பிலை - தாளிப்பிற்கு ஏற்ப

செய்முறை:

  • உடலுக்கு வலுச்சேர்க்கும் பீட்ரூட் ரசம் செய்வதற்க முதலில் பீட்ரூட்டை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும். கொஞ்சம் அரைத்தவுடன் தக்காளி மற்றும் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பீட்ருட் ரசம் செய்வதற்கான கலவை ரெடி.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னதாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். லேசாக வதங்கியதும் போதுமான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • வழக்கம் போல ரசத்தைக் கொதிக்க விடாமல், நுரை கட்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய மல்லி இலைகளைத் தூவி விட்டால் போதும். சுவையான பீட்ருட் ரசம் ரெடி.
beetroot saru

உடலுக்கு வலுச்சேர்க்கும் ரசம்:

மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. எனவே டயட்டில் உள்ளவர்கள் தாராளமாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சருமத்தைப் பளபளப்பாக்குவது முதல் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் மெட்டாபாலிசத்தை அதிகரித்து செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது. இதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP