spicy masala

best spicy foods : உலகின் தலைச்சிறந்த காரச்சாரமான உணவுகள்!

உலகின் மிகவும் காரசாரமான உணவு என்று கருதப்படும் சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள உலகை சுற்றி ஒரு வலம் வரலாம்.   
Editorial
Updated:- 2023-02-15, 08:45 IST

உணவில் சேர்க்க காரமான பொருளாக நாம் நினைப்பது காரத்தன்மை கொண்ட மிளகாய்கள் தான். இதை தவிர, உணவில் சுவையை கூட்டும் காரத்தன்மையின் பின்னனியில் , வெவ்வேறு விதமான மசாலாக்கள் இருக்கின்றன. காரசாரமான உணவுகளை சாப்பிட விருப்பம் கொள்ளும் பலரில் நீங்கள் ஒருவராக இருந்தால், அது போன்ற உணவு வகைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

ஜெர்க் சிக்கன், ஜமாய்க்கா

ஜெர்க் சிக்கன் என்பது கரீபியன் நாட்டின் சமையல் பொருட்களான கிராம்பு, இலவங்கப்பட்டை, பச்சை வெங்காயம், ஜாதிக்காய், தைம் மற்றும் பூண்டு ஆகியவற்றை கொண்டது. மேலும் இது சுவையாகவும், காரமாகவும் இருக்க, இதில் பல விதமான கருப்பு மிளகுகள் சேர்க்கப் படுகின்றன. இந்த சிக்கனை மிளகு தூள் மேல் பூச்சாக ஊற வைத்து, பின் வறுப்பார்கள்.

சிச்சுவான் ஹாட் பாட், சீனா

இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ மற்றும் சிச்சுவான் பெப்பர்கார்ன் சேர்த்து செய்யபடுவது. இது வாத்து, பன்றி, கோழி, ஆடு மற்றும் காய்கறிகள் கலவை கொண்டு செய்ய படும் ஒரு சூடான உணவு வகை.

சோம் டேம், தாய்லாந்து

இந்த சோம் டாம் வகையில் பச்சை பப்பாளி சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம். பின்பு பீன்ஸ் அல்லது அவரைக்காயுடன் வதக்கப்படும். ஆசிய நாட்டின் சமையல் பொருட்களான புளி சாறு, காய்ந்த இறால், மீன் சாஸ் மற்றும் கரும்பு பேஸ்ட் ஆகியவை சேர்த்து செய்யப்படும். மேலும், தாய்லாந்து நாட்டின் காட்டமான மிளகாய் இதை மேலும் கார உணவாக மாற்றும்

இந்த பதிவும் உதவலாம்:இந்தியா மசாலாக்களுக்கான நாடு என்று ஏன் கூறப்படுகிறது

பிரிபிரி சிக்கன், அங்கோலா

15 ஆம் நூற்றாண்டில், அங்கோலா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு, இந்த காரசாரமான உணவு வகையை போர்த்துகீஸ் தான் அறிமுகப்படுத்தியது. இதில் ஆப்பிரிக்க மிளகாய்கள் ஐரோப்பிய சமையல் பொருட்களுடன் கலந்து இருக்கும். இந்த உணவு, கோழி கறி துண்டுகளுடன் மிளகாய் பேஸ்ட், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை, பூண்டு மற்றும் பேசில் விழுதில் ஊற வைத்து செய்யப்படும்.

ஃபேல் கரி, இங்கிலாந்து

இந்த பிரிட்டிஷ் ஆசிய தக்காளி கரி, இங்கிலாந்து, பர்மிங்காம் ல் அறிமுகப்படுத்த பட்டது. இங்கிலாந்தில் உள்ள பங்களாதேஷ் மக்களின் உணவகங்கள் மூலம் இது உலகிற்கு வெளிச்சம் காட்டப்பட்டது. இந்த உணவு வகை மிகச் சிறந்த காரமான உணவு வகைகளில் ஒன்று என்று கூறலாம். இதன் சாஸ் தக்காளி கொண்டு செய்யப்பட்டது, இஞ்சி, சோம்பு, தேவையான அளவு மிளகாய், ஹாபனேரோ அல்லது ஸ்காட்ச் போனட், மிளகாய் சேர்த்து செய்யப்பட்டது. இதில் மிகுந்த காரம் நிறைந்த புட் ஜொலோக்கியா எனும் மிளகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

chicken masala

சிக்கன் செட்டிநாடு, இந்தியா

பாரம்பரிய செட்டிநாடு சமையல் இது. இதில் அன்னாசி பூ, கருப்பு மிளகு, கடல்பாசி மற்றும் மராத்தி மொக்கு ஆகிய உள்ளூர் மசாலாக்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கோழி துண்டுகளுடன் வறுக்கப்பட்ட மசாலாக்கள் மற்றும் தேங்காய் சேர்த்து வேகவைக்கப்படும். இதை பாரம்பரிய முறைப்படி சாதம் அல்லது தோசையுடன் பரிமாறுவார்கள். பாரம்பரிய செட்டிநாடு உணவு என்பது அன்னாசி பூ, கருப்பு மிளகு, கல்பாசி மற்றும் மராத்தி மொக்கு கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும்.

spicy chicken

டோரோ வாட், எதியோபியா

இது எதியோபியா நாட்டின் மசாலாக்கள் கலவை கொண்டு செய்யப்படும். இதில் மிளகாய், பேசில், ஏலக்காய், பூண்டு மற்றும் இஞ்சி இருக்கின்றன. அவை அனைத்தும் கலந்து ஒரு அருமையான மணத்தை இந்த உணவுக்கு கொடுக்கிறது. வேக வைத்த முட்டைகள் இதன் மேல் வைக்கப்படும். இந்த உணவு விசேஷ நாட்களில் பரிமாறப்படும்.

சிலி, அமெரிக்கா

இந்த உணவு இரு விதமாக செய்யலாம். ஒன்று பீன்ஸ் சேர்த்து செய்வது, மற்றொன்று பீன்ஸ் சேர்க்காமல் செய்வது. இது மிளகாய், சீரக தூள் மற்றும் பாப்ரிகா கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் மிளகாய் உணவுகள் மாட்டிறைச்சி , வெங்காயம், மசாலாக்கள், பீன்ஸ், தக்காளி கொண்டு செய்ய படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:சிக்கன் மசாலா பொடி செய்முறை விளக்கம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com