Milk Cake Recipe: சுவையான மில்க் கேக் செய்வது எப்படி?

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட் தான் இந்த மில்க் கேக். இதை வீட்டில் எளிய முறையில் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

milk cake recipe

நம்மில் பலருக்கும் மதியம் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரங்களிலும் உணவு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஏதாவது ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் ஒரு ஸ்வீட் இந்த மில்க் கேக். பல நேரங்களில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்துவதற்கு கடைகளில் இருந்து வாங்கி கொண்டு வரும் ஸ்வீட்ஸ் கொடுப்பதற்கு பதிலாக, இதுபோல ஸ்வீட் வகைகளை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். குறிப்பாக நாம் தினசரி உபயோகிக்கும் உணவு பொருட்களை வைத்து இந்த மில்க் கேக் எளிய முறையில் செய்து விடலாம். சுவையான மில்க் கேக் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான மில்க் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • ஒரு லிட்டர் பால்
  • அரை கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

மில்க் கேக் செய்முறை:

milk cake making

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது பால் கால்வாசியாக குறையும் வரை நன்கு காய்ச்சவும். இந்தப் பால் சுண்ட கொதிக்கும் போது பாத்திரத்தின் முனையில் இருக்கும் பாலை கிளறி விட வேண்டும். இதன் பிறகு சிறிது எலுமிச்சை சாற்றினை பாலில் சேர்க்க வேண்டும். பால் கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் அடிக்கடி மறக்காமல் இந்த பாலை கிளறி விட வேண்டும். இப்போது அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பால் கெட்டியாக ஆரம்பிக்கும் போது அதில் சிறிது நெய் சேர்த்து கிளற வேண்டும். இந்த பால் கலவையானது பாத்திரத்தில் அடி பிடிக்காமல் ஒரு பதத்தில் வரும் வரை நன்கு கிளற வேண்டும். இப்போது இது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் தடவி அதில் இந்த பால் கலவையை சேர்த்து பரப்பி சூடாற விடவும். இந்த கிண்ணத்தை ஒரு அலுமினிய தாள் வைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும். இதனை சில மணி நேரம் கழித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மில் கேக் ரெடி.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP