Banana Halwa: சுவையான வாழைப்பழ அல்வா செய்வது எப்படி?

வீட்டில் எளிய முறையில் சுவையான வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

know how to make banana halwa re ()

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்பு வகைகள் என்றால் அதிகம் பிடிக்கும். அதிலும் குறிப்பாக அல்வா என்று கூறினால் இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமானது. நம் இந்தியாவின் பொதுவான இனிப்பு வகை இந்த அல்வா. என்னதான் நம் தமிழகத்தில் பல வகையான அல்வா ரெசிபிகள் இருந்தாலும் இந்த வாழைப்பழ அல்வா வீட்டில் செய்வதற்கு எளிதாக இருக்கும். அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ அல்வாவை செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • மூன்று வாழைப்பழம்
  • அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • நான்கு அல்லது ஆறு டேபிள் ஸ்பூன் டால்டா
  • மூன்று டேபிள் ஸ்பூன் நெய்
  • வெல்லம் ஒரு கப்
  • கால் கப் பனைவெல்லம்
  • ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பு

சுவையான வாழைப்பழ அல்வா செய்முறை:

Banana Halwa home

ஒரு சிறிய நான் ஸ்டிக் கடாயில் மிதமான வெப்பத்தில் டால்டாவை சேர்த்து கிளறவும். இந்த டால்டா பழுப்பு நிறமாக மாறும் வரை கிளறிவிட்டு நாம் எடுத்து வைத்த வாழைப்பழத்தை தோல் உரித்து கையால் நன்றாக மசித்து கொள்ளவும். நன்கு மசித்த வாழைப்பழத்தை கடாயில் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். அதிகமான வெப்பத்தில் அடுப்பை வைத்தால் பாத்திரத்தில் அடிப்பிடிக்கக்கூடும். இதனால் மிதமான வெப்பத்தில் சமைக்கவும். இதற்கு பிறகு நாம் எடுத்து வைத்த பனைவெல்லம் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் பாகு போல தயார் செய்யவும்.

மேலும் படிக்க: சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வது எப்படி?

இதனை அடுத்து தயார் செய்த வெல்லப்பாகை இந்த வாழைப்பழ கலவையோடு சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ அல்வா ரெடி. இந்த வாழைப்பழ அல்வாவை மாலை ஸ்னாக்ஸ் ஆக மிதமான வெப்பத்தில் பரிமாறுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP