Sweet Potato Laddu: சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

photo ()

கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டாச்சு. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஆரோக்கியமான உணவு வகைகளை சமைத்து கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் அதிகம் பிடிக்கும். அந்த வரிசையில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு செய்ய தேவையான பொருட்கள்:

  • சர்க்கரைவள்ளி கிழங்கு அரை கிலோ
  • தேங்காய் துருவல் ஒரு கப்
  • நாட்டு சர்க்கரை அரை கப்

சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு செய்முறை:

Shakkarkandi ke Laddu original ()

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். பிறகு வேகவைத்த இந்த சர்க்கரையை வள்ளி கிழங்கு எடுத்து தோலை உரித்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இப்போது இந்த கிண்ணத்தில் இருக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு பிசைந்து அதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது ஒரு தட்டில் தேங்காய் துருவலை உதிரியாக வைத்து கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரையுடன் சர்க்கரை வெள்ளிக்கிழமை பிசைந்து உருண்டைகளாக லட்டு போல பிடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு லட்டுகளை இந்த தேங்காய் துருவலில் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் கழித்து இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஜில்லாக குழந்தைகளுக்கு பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க: சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

சர்க்கரை வள்ளி கிழங்கு நன்மைகள்:

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான நம் உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது. இது உங்கள் உடலின் உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. அதே போல உடல் எடை குறைக்கவும் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP