குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் எள்ளு சாதம்! செய்வது எப்படி?

வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவும் கருப்பு எள்ளை வைத்து சுவையான எள்ளு சாதம் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

ellu sadam recipe
ellu sadam recipe

நம்மில் பலரும் இனிப்பு எள்ளு உருண்டை சாப்பிட்டிருப்போம். சுவை மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இனிப்பு எள்ளு சாதம் பற்றி உங்களுக்கு தெரியுமா? நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு சத்து மிகுந்த தானியம் தான் எள்ளு. நம் முன்னோர்கள் எள்ளு துவையலாகவும் உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். குறிப்பாக திருநெல்வேலி மக்கள் இந்த எள்ளு பொடியை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள விரும்புவார்கள். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் இந்த ஸ்வீட் எள்ளு சாதம் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்வீட் எள்ளு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

  • 50 கிராம் கருப்பு எள்
  • 50 கிராம் வெல்லம்
  • 4 ஏலக்காய்
  • ஒரு கப் அரிசி
  • முந்திரி தேவையான அளவு
  • ஒரு மூடி துருவிய தேங்காய்
  • நெய் தேவையான அளவு

sesame rice

ஆரோக்கியமான ஸ்வீட் எள்ளு சாதம் செய்முறை:

  • கருப்பு எள்ளை ஊறவைத்து கலைந்து நன்கு தேய்த்து, வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும்.
  • இதனை மீண்டும் தேய்த்து நன்கு புடைத்து, வெறும் வாணலியில் இந்த எள்ளு பொடியை வறுத்து எடுக்கவும்.
  • இதனோடு பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
  • இந்த எள்ளு பொடி ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும்.
  • வேக வைத்த அரிசி சற்று சூடு ஆறியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடி, வருத்த முந்திரி, தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான ஸ்வீட் எள்ளு சாதம் ரெடி.
  • இரும்புச்சத்து நிறைந்துள்ள இந்த ஸ்வீட் எள்ளு சாதம் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க: ஆரோக்கியமான கேரளா ஸ்டைல் புட்டு, கடலை கறி சமையல்

கருப்புஎள்ளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

கருப்பு எள்ளை நம் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை அதிக அளவு நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பு அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. கருப்பு எள்ளில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடைய உதவுகிறது. அதேபோல கருப்பு எள்ளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் உணவு செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுக்கிறது. இந்த கருப்பு எள்ளில் உள்ள இரும்பு சத்து தலைமுடி வேர்களுக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் கருப்பு எள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP