பெரிய வெங்காயம் அழுகாமல் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தி பயன்படுத்த இதை செய்யுங்க

சமையலுக்கு மிகவும் தேவையான பொருட்களில் பெரிய வெங்காயம் முதன்மையானது. எந்த உணவாக இருந்தாலும் குறைந்தது ஒரு வெங்காயம் பயன்படுத்துவோம். வெங்காயத்தை முறையாக பதப்படுத்த தவறினால் எளிதில் கெட்டு போய்விடும். வெங்காயத்தில் வாசனையும் வராது. பெரிய வெங்காயத்தை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த இதை தெரிஞ்சுகோங்க...
image
image

வீட்டில் சமையல் செய்வதற்கு எப்போதும் அம்மா வாங்கும் இரண்டு பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம், தக்காளி. இவை இரண்டும் இன்றி சமைப்பது கடினம். தக்காளியை வெயில் காலத்தில் பாதுகாப்பது சிரமம். வெங்காயம் கெட்டுப்போகாது என நினைத்தால் பூஞ்சை பாதிப்பால் கருப்பு நிறத்திற்கு மாறி தண்ணீர் விட்டு வெங்காயத்தின் இயல்பான வாசனை போய்விடும். வெங்காயத்தை சுற்றி அதிக ஈரப்பதம் இருந்தால் முளைகட்டிவிடும். வெங்காயத்தை இரண்டு மாதங்கள் வரை கெடாமல் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தி பாதுகாக்க நீங்கள் சில விஷயங்களை செய்தால் போதுமானது. வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய் சென்றால் சாமானிய மக்களாக புலம்பி தள்ளுகிறோம். எனவே வெங்காயத்தை பதப்படுத்தும் விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது.

prevent onion rot

வெங்காயம் பதப்படுத்துவது எப்படி ?

ஈரப்பதம் குறைக்கவும்

வெங்காயத்தை ப்ரெஷ் ஆக வைத்திருக்க அதை பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை தவிர்க்கவும். கடைக்கு சென்று வெங்காயம் வாங்கி வந்த பிறகு வெங்காயத்தை அப்படியே பிளாஸ்டிக் பையில் விட்டுவிடுகிறோம். காற்று புகாத பையில் வெங்காயத்தை வைக்கும் போது ஈரப்பதம் உள்ளேயே தேங்கி வெங்காயம் எளிதில் கெட்டுப் போகிறது. பூஞ்சை வளர்வதற்கும் ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

வெங்காயத்தை வெளிச்சத்தில் வைக்காதீர்கள்

அதீத வெளிச்சம் படும் இடத்தில் வெங்காயத்தை வைக்காதீர்கள். இதமான வெப்பநிலை மற்றும் காற்றோட்டமான இடத்தில் வெங்காயம் வைக்கவும், நேரடி சூரிய வெளிச்சத்திற்கு கீழ் வெங்காயம் வைக்காதீர்கள். ஏனெனில் வெயில் காரணமாக வெங்காயம் கெட்டுப் போகலாம். நிழலான இடத்தில் வெங்காயம் சேமிக்கவும்.

ஃப்ரிட்ஜில் வெங்காயம்

வெங்காயத்தை பாதியாக நறுக்கிவிட்டால் அதை ஃப்ரிட்ஜில் ஒரு வாரத்திற்கு சேமித்துவைக்கலாம். கண்ணாடி பாத்திரத்தில் வெங்காயத்தை போட்டு வைக்கவும். கண்ணாடி பாத்திரம் சரியாக மூடி இருந்தால் வெங்காயம் ப்ரெஷ் ஆகவே இருக்கும். ஃப்ரீஸரிலும் வெங்காயத்தை பல மாதங்களுக்கு பதப்படுத்தி வைக்கலாம். பதப்படுத்திய வெங்காயம் சமையலுக்கு உகந்தது. ஆனால் தயிர் பச்சடிக்கு பயன்படுத்த முடியாது.

உருளைக்கிழங்குடன் வைக்காதீர்கள்

வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க கூடாது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் எத்திலின் ( Ethylene ) உருளைக்கிழங்கை கெட்டுப் போகச் செய்யும். அதே போல ஈரப்பதம் கொண்ட உருளைக்கிழங்கு வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவை இரண்டையும் தனித்தனியாக வைப்பது நல்லது.

மேலும் படிங்கவாங்கும் நெய் சுத்தமானதா ? கலப்படம் செய்யப்பட்டதா ? கண்டறிவதற்கான எளிய வழிகள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP