வாங்கும் நெய் சுத்தமானதா ? கலப்படம் செய்யப்பட்டதா ? கண்டறிவதற்கான எளிய வழிகள்

பசுவில் இருந்து கிடைக்கும் நெய் இந்தியாவில் மிகப்பெரிய கலப்பட பொருளாக மாறியுள்ளது. தங்கம் போல் ஜொலிக்கும் நெய்யில் கலப்படத்தை கண்டறிய சில வழிகள் உள்ளன. அடுத்தமுறை நெய் வாங்கும் போது சில பரிசோதனை செய்து அது சுத்தமான நெய் தானா என உறுதி செய்யுங்கள்.
image

பல ஆண்டுகளாக சமையலைறையில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நெய் முக்கியமானது. சமைக்கும் உணவின் சுவையை கூட்டவும் அதன் நன்மைகளை கருதியும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கிறோம். ஒரு லிட்டர் நெய் 800 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலையில் பல கயவர்கள் அதில் கலப்படம் செய்து கொள்ளையடிக்கின்றனர். மின்னுவது எல்லாம் பொன் அல்ல என்பது போல தங்க நிறத்தில் விற்கப்படும் நெய் அனைத்தும் சுத்தமானதும் அல்ல. இந்தியாவில் அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவுகளில் நெய் முதன்மை வகிக்கிறது. எனவே நெய் வாங்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் கலப்பட நெய் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வனஸ்பதி, காய்கறி எண்ணெய், பாம் ஆயில் கொண்டு கலப்பட நெய் தயாரிக்கப்படுகிறது.

ghee purity test

சுத்தமான நெய் கண்டறியும் முறை

மிதக்கும் டெஸ்ட்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் தண்ணீரின் மேல் பரப்பில் மிதந்தால் அது மிகவும் சுத்தமான நெய் என அர்த்தம். நெய் தண்ணீரில் கரைந்தால் நீங்கள் உடனடியாக வாங்கிய கடைக்கு சென்று போலி நெய் விற்பனையை தட்டி கேளுங்கள்.

ஃபிரிட்ஜ் டெஸ்ட்

நெய்யை கொஞ்சம் சூடுபடுத்தி அதை சிறிய பாத்திரத்தில் ஃபிரிட்ஜில் வைக்கவும். சுத்தமான நெய் ஆக இருந்தால் அது கெட்டியாக மாறும். போலி அல்லது கலப்பட நெய் ஆக இருந்தால் அதில் அடுக்குகள் உண்டாகும்.

ஐயோடின் பரிசோதனை

நெய்யில் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். சில நிமிடங்களுக்கு காத்திருக்கவும். நெய் நிறம் நீல நிறத்திற்கு மாறினால் அது கலப்படம் செய்யப்பட்ட நெய் ஆகும். அதாவது நெய்-ல் ஸ்டார்ச் கலந்திருப்பதாக அர்த்தம்.

சுத்தமான நெய் ?

மேற்கண்ட பரிசோதனை வழிகளை விட மிகவும் எளிதாக உள்ளங்கையில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். சுத்தமான நெய் வேக வேகமாக கரையும் கையில் வழுக்கும். கலப்படம் செய்யப்பட்ட நெய் கரையவே கரையாது.

ஹைட்ரோகுளோரிக் டெஸ்ட்

வீட்டில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருந்தால் சுத்தமான நெய் கண்டறிவது எளிதாகிவிடும். நெய்யில் ஒரு சொட்டு ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்த்து கலக்கவும். சிவப்பு நிறத்தில் நெய் மாறினால் அது கலப்பட நெய் ஆகும்.

கடைகளில் நெய் தங்கம் போல் ஜொலிக்கிறது என வாங்கிவிடாதீர்கள். இந்த பரிசோதனைகளை செய்து நெய் சுத்தமானதா ? கலப்படம் செய்யப்பட்டதா ? என கண்டறியவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP