குளிர்காலத்தில் சுடச்சுட மீன் வறுத்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். பீகார், உத்தரப்பிரதேசம் , மத்திய பிரதேசம் என இந்தியாவில் வாழும் மக்கள் பலரும் குளிர்காலத்தில் மீன்களை வறுத்து சாப்பிட அதிகம் விரும்புகின்றனர். முதல் நாள் இரவே மீனில் மசாலா சேர்த்து தயார் செய்துவிட்டு மறுநாள் காலை அதை வறுத்து சாப்பிடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும்.
அதே நேரம் மீன் ஃபிரஷாக இருக்கும் போது மட்டுமே அதன் சுவை அருமையாக இருக்கும். ருசி அதிகம் இருக்காத பழைய மீன்களை பெரும்பாலான மக்கள் ஏமாந்து வாங்கி விடுகின்றனர். இவை உறைந்த மீன்கள் ஆகும்.
எனவே, நீங்கள் மீன் வாங்கும் போது சில விஷயங்களை நினைவில் கொண்டு கவனித்து வாங்கினால் இதுப்போல் ஏமாற வேண்டிய தேவை இருக்காது. இந்த பதிவில் தரமான ஃபிரஷான மீன்களை வாங்குவது எப்படி? என்ற டிப்ஸ்களை உங்களுக்கு சொல்கிறோம் படித்து பயனடையுங்கள்.
மீன் கண்கள்
மனிதனின் கண்கள் கூட பொய் சொல்லலாம். ஆனால் மீனின் கண்கள் எப்போதுமே பொய் சொல்லாது. இதை படிக்கும் போது உங்களுக்கு வேறமாதிரி தோணலாம். ஆனால் ஃபிரஷான தரமான மீன்களை அடையாளம் கண்டு கொள்ள மீனின் கண்கள் உதவுகிறது. எப்போதுமே மீன் வாங்கும் போது அதன் கண்ணை பார்க்க வேண்டும்.
புதிய ஃபிரஷான மீனின் கண்கள் வெள்ளை நிறத்தில் இருக்காது. பழைய மீன்களின் கண்ணில் மட்டுமே வெள்ளை நிறத்தில் ஒரு அடுக்கு போல் தெரியும். இது தவிர, புதிய மீன்களின் கண்கள் பளபளப்பாகவும், சிவப்பு நிறத்தில் சற்று வீக்கமாகவும் இருக்கும். எனவே கண்கள் வெள்ளையாக இருக்கும் மீன்களை வாங்காதீர்கள். அவை பழைய மீன்களாக இருக்கலாம் அல்லது சீக்கிரத்தில் கெட்டுப்போகலாம்.
இந்த பதிவும் உதவலாம்:தெரியுமா உங்களுக்கு - முள்ளங்கியை பார்த்து வாங்குவது எப்படி?
மீன் செவுள்கள்
புதிய ஃபிரஷான மீன்களை அடையாளம் காணும் மற்றொரு முறை செவுள்களை பார்ப்பது. நீங்கள் மீன் வாங்குவதற்கு முன்பு அந்த மீனின் செவுள்களை நிமிர்த்தி பாருங்கள். சிவப்பாக இருந்தால் அந்த மீனை வாங்கலாம். சில நேரங்களில் மீனின் செவுள்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அப்படி இருந்தால் அது பழைய மீனாகவோ அல்லது ஐஸ் வைத்த மீனாகவோ இருக்கலாம்.
முகர்ந்து பார்க்கவும்
பலருக்கும் மீனை சமைத்து சாப்பிட பிடிக்கும். ஆனால் மீன் வாடை பிடிக்காது. அதே நேரம் புதிய ஃபிரஷான மீன்களை கண்டறிய மீன் வாடையை முகர்ந்து பார்ப்பது மிகவும் உதவும். மீனை வாங்குவதற்கு முன்பு அதை மூக்கின் அருகில் வைத்து முகர்ந்து பாருங்கள். மீன் வாடை வந்தால் அது நல்ல மீன். மீனில் ஒருவிதமான நாற்றம் அடித்தால் அது கெட்டுப்போன மீனாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:பச்சை மிளகாய் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்
மீன் தோல்
குளிர்காலத்தில் புதிய ஃபிரஷான மீன்களை பார்த்து வாங்குவதற்கு மற்றொரு சிறந்த வழி மீனின் தோல். ஐஸில் வைக்கப்பட்ட மீனின் தோல் வெள்ளையாக இருக்கும். இதுவே புதிய மீனாக இருந்தால் அதன் தோல் வெளிர் சிவப்பு/இளஞ்சிவப்பு நிறமாகவும் அதன் சதை ஃபிரஷாக பளபளவென இருக்கும். மீனின் தோல்கள் அதுவாகவே கிழிந்து வந்தால் அந்த மீன்களை வாங்காதீர்கள்.
இதையும் நினைவில் கொள்ளவும்
பழைய மீன்களின் சதைப்பகுதி தளர்வாக தொள தொளவென இருக்கும். புதிய ஃபிரஷான மீன்களின் சதைப்பகுதி விரைப்பாக தடிமனாக இருக்கும். இதை வட்ட வடிவில் ஸ்லைஸ் போடும் போதும் அதன் உள்ளே முழுவதும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஐஸ் மீன்கள் ஒன்று கெட்டுபோனதாக இருக்கும் அல்லது வெளிர் நிறத்தில் இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation