மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!

மல்லிகை செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இதற்காக எலுமிச்சை பழத் தோல் கொண்டு உரம் தயாரிக்கும் முறையை இதில் காண்போம்.
image
image

இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நகரங்களில் வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தாலும், பலர் தங்களுக்கு கிடைக்கும் சிறிய இடத்தில் கூட ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, வீட்டின் பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ மல்லிகை செடி வளர்ப்பில் பலருக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால், செடி வளர்ப்பவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டும் என்பது தான்.

உங்கள் மல்லிகை செடியிலும் அதிகப்படியான பூக்கள் பூக்க வைக்க எளிய வழிகள் உள்ளன. அதற்கு, தேவையான தண்ணீர் உரத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கு தேவைப்படுவது எலுமிச்சை பழத் தோல்கள் மட்டும்தான்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழத் தோல்கள் (10 பழங்களின் தோல்கள்),

ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும்

ஒரு பாட்டில்.

உரம் தயாரிக்கும் முறை:

1. முதலில், 10 எலுமிச்சை பழத் தோல்களை எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

2. இந்தத் துண்டுகளை ஒரு பாட்டிலில் போட்டு, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, ஒரு வாரம் முழுவதும் அப்படியே ஊற வைக்கவும்.

3. ஒரு வாரம் கழித்து பார்த்தால், எலுமிச்சை பழத் தோலில் உள்ள சத்துகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து, அதுவே செடிக்கு தேவையான உரமாக மாறிவிடும்.

Jasmine flower

மேலும் படிக்க: காய்கறி செடி மீது மோர் ஊற்றி பாருங்க தழைத்து வளர்ந்து கொத்து கொத்தாக காய்க்கும்

பயன்படுத்துவது எப்படி?

1. இந்த திரவத்தை, நீங்கள் வளர்க்கும் மல்லிகை செடியின் அளவிற்கு ஏற்ப தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இது தான் உங்கள் செடிக்கு தேவையான தண்ணீர் உரம்.

2. மல்லிகை செடி வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் உள்ள மண்ணை, லேசாக கிளறிவிட்டு, அதில் இந்த உரத்தை தேவையான அளவு ஊற்றவும்.

3. அதேபோல், இந்த உரத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, செடியின் இலைகளின் மீதும் ஸ்ப்ரே செய்யலாம்.

Lemon peel

இப்படி செய்வதால், மல்லிகை செடியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதோடு, செடியில் அதிக பூக்களும் பூக்கும். மேலும், மண்ணின் pH அளவையும் இது சமநிலையில் வைத்திருக்க உதவும். இந்த எளிய முறையை பின்பற்றி, உங்கள் வீட்டிலும் அதிக வாசனையுள்ள மல்லிகை பூக்களை பெறலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP